விளக்கு உவமை

From Wikipedia, the free encyclopedia

விளக்கு உவமை
Remove ads

விளக்கு உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் மூன்று நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்றது. மத்தேயு 5:14–15, மாற்கு 4:21–25 மற்றும் லூக்கா 8:16–18இல் இடம் பெறும் இவ்வுவமை, இந்த நூல்களில் விவரிப்பில் மிக சிறு வேறுபாட்டையே கொண்டுள்ளது. மாற்கு நற்செய்தியில் இவ்வுவமை உப்பும் ஒளியும் சொற்பொழிவுக்கு பின் வருகின்றது.

Thumb
மாற்கு நற்செய்தியில் விளக்கு உவமைக்கு அடுத்துவரும் வளரும் விதை உவமையும் சேர்த்து ஒரே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது

இயேசுவின் இந்த உவமையின் அடிப்படையில் "to hide one's light under a bushel" என்னும் ஆங்கில பழமொழியும் உண்டு.[1]

Remove ads

உவமையின் விவரிப்பு

லூக்கா நற்செய்தியில், பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் கூறியது:

'எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்'

லூக்கா 11:33–36, பொது மொழிபெயர்ப்பு

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads