விளையாட்டுச் சீட்டுக்கட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விளையாட்டுச் சீட்டுக்கட்டு (playing cards) என்பது ரம்மி, மங்காத்தா போன்ற பல சீட்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் 54 சீட்டுக்களைக் கொண்ட கட்டைக் குறிக்கும்.

இந்தக் கட்டில் 52 அடிப்படைச் சீட்டுக்கள் உள்ளன. இந்தச் சீட்டுகள் நான்கு தொகுப்புகளாக, ஆங்கிலத்தில் ஸ்வீட் (suit) உள்ளன. ஒரு தொகுப்பில் உள்ளவை ஒரே நிறத்திலும் ஒரே சின்னத்திலும் இருக்கும். ஒவ்வொரு சீட்டும் ஒரு தொகுப்பிலும் ஒரு எண் (மதிப்பு அல்லது வரிசை எண்) கொண்டும் இருக்கும். சீட்டுக்கட்டில் நான்கு தொகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும் 13 சீட்டுக்கள் உள்ளன. இவற்றைத்தவிர இரண்டு ஜோக்கர் எனப்படும் கோமாளி சீட்டுகளும் உண்டு. ஜோக்கர்கள் எந்த தொகுப்பிலும் இல்லை;மற்றும் மதிப்பு அல்லது வரிசை எண் கிடையாது.[1][2][3]
Remove ads
தொகுப்புகள்
- ஆங்கிலத்தில்: இசுபேட் - Spade (♠), ஆர்ட் - Heart (♥), டயமண்ட் - Diamond (♦), கிளப் - Club (♣).
- தமிழில்: இசுகோப்பன் (♠), ஆடித்தன் (♥), ஊவித்தன் (♦), கலாவரை (♣).
பல்வேறு நாடுகளில் இந்தச் சின்னங்கள் மாறுபட்டிருக்கலாம். மத்திய ஐரோப்பாவில் இவற்றிற்கான சின்னங்களாக அக்கார்ன், இலை, இதயம், மற்றும் மணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலியிலும் இலத்தீன அமெரிக்காவிலும் இத்தொகுப்புகள் கிளப்கள், இசுவர்டுகள், கப்புகள், மற்றும் காயின்கள் எனப்படுகின்றன.
மதிப்புகள்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ஜாக் அல்லது மந்திரி (J), அரசி (Q), அரசர் (K), ஏஸ் (A). பல ஆட்டங்களில் ஏசிற்கு உயர்ந்த மதிப்பு உள்ளது; சிலவற்றில் குறைந்த மதிப்பு உள்ளது.
மந்திரிகள், அரசிகள், மற்றும் அரசர்கள் தங்கள் படங்களுடன் காணப்படுவதால் முகச் சீட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதயங்களின் அரசர், கிங் ஆப் ஆர்ட்ஸ், சில சீட்டுக்கட்டுகளில் தமது தலைக்கு மேல் கத்தியுடன் காணப்படுவதால் 'தற்கொலை அரசர்' என அழைக்கப்படுகிறார். மற்ற சீட்டுக்களுக்கும் விளிப்பெயர்கள் உள்ளன: '2' சீட்டுகள் டியூசஸ் எனவும் குறிப்பிடப்படுகின்றன; '3' சீட்டுக்கள் டிரேயசு; ஏசுகள் புல்லட்ஸ்; அரசர்கள் கௌபாய்கள்; டையமண்டு அரசர் கோடாரியுடனான மனிதன். ஒற்றைக்கண் மந்திரிகள் இதயத்தொகுப்பு மற்றும் இசுபேடு தொகுப்பு மந்திரிகளாகும்.
பல ஆட்டங்களில் ஜோக்கர்கள் இல்லாமல் 52 சீட்டுக்களுடன் விளையாடுவர். சில ஆட்டங்களில் சில சீட்டுக்கள் நீக்கப்பட்டு 40, 36, 32 சீட்டுக்களுடனும் (காட்டாக துருப்புசீட்டாட்டம்) ஆடுவர்.
டாரட் சீட்டுகள் 78 சீட்டுக்கள் கொண்டவை. பொதுவாக இவை குறி சொல்வதற்கே பயன்படுத்தப்பட்டாலும் சில ஐரோப்பிய நாடுகளில் சீட்டாட்டத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads