வி. பாஷ்யம் ஐய்யங்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திவான் பகதூர் சர் வெம்பாக்கம் பாஷ்யம் அய்யங்கார் (Diwan Bagadur, Sir Vembakkam Bhashyam Aiyangar) (சனவரி 1844 – 18 நவம்பர் 1908), சென்னை மாகாணத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகவும் விளங்கியவர்.
Remove ads
வகித்த பதவிகள்
பாஷ்யம் அய்யங்கார் 1897 முதல் மார்ச் 1898 முடியவும், பின்னர் செப்டம்பர் 1899 - மார்ச் 1900 வரையிலும், சென்னை மாகாணத் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய முதல் இந்தியர் ஆவார்.[1]
பிப்ரவரி 1897-இல் தமிழ்நாடு சட்ட மேலவையில் அலுவல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1899 மற்றும் 1900 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1][2]
பாஷ்யம் அய்யங்கார் சூலை 1901 முதல் 1904 முடிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராக பணியாற்றினார்.[3]
Remove ads
மரபுரிமைப் பேறுகள்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாஷ்யம் அய்யங்காரின் முழு உருவச்சிலை, 1927-இல் நிறுவப்பட்டது. இவரது பேத்தியான அம்புஜத்தம்மாள் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads