வீட்டுத் தன்னியக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீட்டுத் தன்னியக்கம் (Home automation) என்பது வீட்டுடன் தொடர்புடைய பல்வேறு தொழிற்பாடுகளை கணினி இலத்திரனியல் உதவியுடன் தன்னியக்கமாக்குதல் ஆகும்.[1][2][3]
பல வீடுகளில் தற்போதே சில தொழிற்பாடுகள் தானாக இயங்குகின்றன. தீ பரவும் பொழுது எச்சரிக்கை ஒலி எழுப்பி தண்ணீரைப் பீச்சி அடிப்பது, அறியாதோர் வலிந்து நுழையும் பொழுது எச்சரிக்கை ஒலி எழுப்பி தேவைப்பட்டால் காவல் துறையை அழைப்து, தானியக்க கதவு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எதிர்காலத்தில் உணரிகள், நிகழ்படக் கருவிகள், ஒளிவாங்கிகள் வீட்டின் பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவிகள் கம்பியில்லா தொடர்பாடலை பயன்படுத்தும். இவற்றை செயற்கை அறிவாற்றல் மிக்க கணினிகள் கட்டுப்படுத்தும்.
Remove ads
தானியக்கச் செயற்பாடுகள்
- கழிவுகளை வெளியேற்றல்
- வீட்டில் ஆள் இல்லாத போது கருவிகளை நிறுத்துதல் அல்லது தூங்கச்செய்தல்.
- வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் பால் போன்ற அடிப்படைப் பொருட்கள் தீர்ந்தால் அவற்றை பட்டியலிட்டு கொண்டு வரச் செய்தல்.
- மலம் கழிக்கும் பொழுது அதன் வேதியியல் பண்புகளை சோதித்து நோய் அறிகுறிகளைப் பற்றி அறிவித்தல்.
- தானியாங்கிகள் மூலம் வீட்டைச் சுத்தம் செய்தல்.
- கால நிலைக்கேற்ப தோட்டத் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சுதல்.
- நேரத்துக்கு மருந்து எடுக்கும் வண்ணம் நினைவுறுத்தல்.
- முதியோரை அவதானித்து,வழமைக்கு மாறாக ஏதாவது நடந்தால் உறவினருக்கு தெரிவித்தல்.
Remove ads
வெளி இணைப்புகள்
- அறிவுள்ள வீடு - (ஆங்கில மொழியில்)
- Home Automation 101 பரணிடப்பட்டது 2008-12-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads