வீரசந்த் காந்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரசந்த் ராகவ்ஜி காந்தி (Virachand Raghavji Gandhi) (25 ஆகஸ்டு 1864 – 7 ஆகஸ்டு 1901)[1] வழக்கறிஞரும், சமண சமய அறிஞரும் ஆவார். இவர் 1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.[2] இவருடன் இந்து சமயத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மற்றும் பௌத்த சமயத்தின் பிரதியாக இலங்கையின் அனகாரிக தர்மபால கலந்து கொண்டனர்.



வீரசந்த் காந்தி சமணம் மட்டுமின்றி பௌத்தம், வேதாந்தம், கிறித்தவம் மற்றும் மேற்குலக தத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர். காந்தி சமணத்தின் முக்கிய கொள்கையான அகிம்சையை பரப்பினார். இவர் சமணம் மற்றும் பிற சமயங்கள் குறித்தும், சமூகம் மற்றும் பண்பாட்டு வாழ்வியல் குறித்து 555 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.
Remove ads
படைப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads