வெசுட்டோ மெல்வின் சுலிப்பர்
அமெரிக்க வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் (Vesto Melvin Slipher) (நவம்பர் 11, 1875 - நவம்பர் 8, 1969) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் முதன்முதலாக பால்வெளிகளின் ஆர விரைவுகளைக் கணக்கிட்டார். இது விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கு ஆய்வுசார் அடிப்படையைத் தந்தது.[1] [2][3][4]
சுலிப்பர் இந்தியானாவைச் சேர்ந்த மல்பெரியில் பிறந்தார். இவர் தன்முனைவர் பட்டத்தை 1909 இல் புளூமிங்டன் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1] இவர் அரிசோனாவில் பிளேகுசுடாபில் அமைந்த உலோவல் வான்காணகத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கழித்தார். இங்கு இவர் 1915 இல் உதவி இயக்குநர் ஆனார். 1916 இல் செயல் இயக்குநர் ஆனார். இறுதியாக, 1926 இல் இருந்து 1952 இல் ஓய்வுபெறும் வரை இயக்குநராக இருந்தார்.[1] இவரது உடன்பிறப்பாகிய இயர்ள் சி. சுலிப்பரும் வானியலாளராகி, உலோவல் வான்காணக இயக்குநராகத் இருந்துள்ளார்.
சுலிப்பர் கோள்கலின் சுழற்சி நேரத்தையும் அவற்றின் வளிமண்டலங்களையும் கண்டறிய கதிர்நிரல் பதிவியலைப் பயன்படுத்தினார். இவர் 1912 இல் முதன்முதலில் பால்வெளிகளின் கதிர்நிரல் வரிகளின் பெயர்ச்சியையும் நோக்கியுள்ளார். எனவே பால்வெளிகளின் செம்பெயர்ச்சியின் கண்டுபிடிப்பாளரும் இவரே ஆவார்.[5]
சுலிப்பர் 1914 இல் முதன்முதலில் சுருள் பால்வெளிகளின் கதிர்வீச்சையும் கண்டுபிடித்தார்.[6]
இவர் 1929 இல் உவரிய (சோடிய) அடுக்கைக் கண்டுபிடித்தார்.[7] இவர் கிளைடு தாம்பவுகை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு புளூட்டோவைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது.[1]
தவறுதலாக, எட்வின் ஹபுள் பால்வெளிகளின் செம்பெயர்ச்சியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது;[8] இந்த அளவீடுகளும் அதன் சிறப்பும் 1917 க்கு முன்பே பிற வான்காணகங்களில் இருந்த ஜேம்சு எட்வார்டு கீலர் (இலிக், அல்லெகனி), வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் (உலோவல்), வில்லியம் வாலசு கேம்பெல் (இலிக்) ஆகியோரால் அறியப்பட்டிருந்தன.
வெசுட்டோ சுலிப்பரின் பால்வெளிச் செம்பெயர்ச்சி அளவீடுகளை தனது பால்வெலித் தொலைவு அளவீடுகளை இனைத்து, அபுளும் மில்ட்டன் குமாசனும் வான்பொருட்களின் தொலைவுகளுக்கும் செம்பெயர்ச்சிகளுக்கும் இடையில் ஒரு கரடான விகித உறவு உள்ளதைக் கண்டுபிடித்தனர். இந்தச் செம்பெயர்ச்சி-தொலைவு ஒட்டுறவு, இப்போது அஉள் விதி எனப்படுகிறது; இது இருவராலும் 1929 இல் உருவாக்கப்பட்டது. இது விரிவுறும் அண்டம் எனும் புத்தியற்காலப் படிமம் ஆனது.
இவர் அரிசோனாவில் உள்ள பிளேகுசுடாபில் இறந்தார்.[1][9] அங்கே மக்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
Remove ads
விருதுகள்
- இலாலண்டே பரிசு (1919)[1]
- பாரிசு அறிவியல் கல்விக்கழக பொற்பதக்கம் (1919)[1]
- என்றி திரேப்பர் பதக்கம், தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1932)[1][10]
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1932)[1][11]
- புரூசு பதக்கம் (1935)[12]
- நிலாவின் சுலிப்பர் குழிப்பள்ளமும் செவ்வாயின் குழிப்பள்ளமும் 1962 செப்டாம்பர் 7 இல் இந்தியானா சிறுகோள் திட்டத்தில் கண்டுபிடித்த சிறுகோளான 1766சுலிப்பரும் இயர்ள், வெசுட்டோ சுலிப்பர் நினைவாக பெயரிடப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads