வெண்மேகம் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

வெண்மேகம் (திரைப்படம்)
Remove ads

வெண்மேகம் பெப்ரவரி 2014ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை ராம்-லட்சுமண் இயக்கினார்[1]. இதில் விதார்த், இசாரா, ரோகிணி, போன்ற பலர் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் வெண்மேகம், இயக்கம் ...

கதைச்சுருக்கம்

சென்னையில் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியாராக இருக்கும் ரோகிணி, தனது கணவரைப் பிரிந்து தனது மகளான ஜெயசிறீ சிவதாசுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரே ஆதரவு ஜெயசிறீ மட்டும்தான். தனது கணவர் மாதிரியான ஆண்களிடம் ஏமாந்து போய்விடக்கூடாது என்பதற்காக அவளை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார்.

தன்னுடைய விருப்பத்துடன் வாழத் தடையாக இருக்கும் அம்மா மீது ஜெயசிறீ வெறுப்புடனே இருக்கிறாள். இந்நிலையில், இவரது வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் விதார்த் மற்றும் ஜெகன் ஆகியோர் ஜெயசிறீக்கு ஆறுதலாக இருக்கின்றனர். இதனால், அவர்களிடம் நெருங்கிப் பழகி வருகிறார் ஜெயசிறீ.

ஒருநாள் விதார்த் கடைக்கு ஸ்டிக்கர் ஒட்ட வரும் இசாராவை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார் விதார்த். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களுடைய காதல் சுமுகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில், விதார்த்துடன் ஜெயசிறீ நெருங்கி பழகுவது நாயகிக்கு பிடிக்கவில்லை. இதை ஒருநாள் ஜெயசிறீயை அழைத்து கண்டித்தும் விடுகிறாள். பதிலுக்கு ஜெயசிறீ தான் பத்து வருடமாக விதார்த்துடன் நெருங்கிப் பழகி வருவதாகவும், அவர்மீது அளவு கடந்த ஆசை வைத்திருப்பதாகவும் கூறுகிறாள். இதனால் கோபமடைந்த இசாரா இந்த விடயத்தை ஜெயசிறீயின் அம்மாவிடம் சென்று முறையிடுகிறாள்.

கோபமடைந்த ரோகிணி, ஜெயசிறீயை அழைத்து கண்டிக்கிறாள். கோபத்தில் வீட்டில் இருந்து வெளியேறுகிறாள் ஜெயசிறீ. வெளியே செல்லும் நாயகி, விதார்த்துக்கு போன் செய்கிறாள். ஆனால், அந்த போனை விதார்த்தின் நண்பன் ஜெகன் எடுக்கிறார். வேலை தொடர்பாக இருவரும் விசாகப்பட்டினம் சென்றிருப்பதாகவும், இங்கேயே செட்டிலாகிவிடப் போகிறோம் என்று கிண்டலுக்கு ஒரு வார்த்தையையும் விட்டுவிட்டு போனை துண்டித்து விடுகிறான்.

இதை உண்மை என நம்பி, ஜெயசிறீ விசாகப்பட்டினத்துக்கு பயணமாகிறாள். அங்கு விதார்த்தை தேடி அலைகிறாள். எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல் தனிமையில் தவிக்கிறார். அப்போது, அங்கே உள்ளூர் பெண் தாதாவான கல்யாணியின் கண்ணில் படுகிறார். அவர் விசாகப்பட்டினத்தில் குழந்தை இல்லாத பணக்காரர்களுக்கு ஏழை பெண்களைப் வாடகை தாயாக அனுப்பும் வேலையை நிழல் உலகில் செய்து வருகிறார்.

அவரிடம் தஞ்சம் புகும் ஜெயசிறீயையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி விடுகிறார். இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் வேலை தேடிச் சென்ற விதார்த் மீது ஜெயசிறீயின் அம்மா ரோகிணி தனது பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். சென்னை திரும்பும் விதார்த்தைக் காவற்துறை விசாரிக்கிறது. விசாரணையில் விதார்த் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

ஜெகன் விதார்த்திடம் ஜெயசிறீ தன்னிடம் பேசியதாகவும், விசாகப்பட்டினத்தில் செட்டிலாகிவிடுவோம் என்று பொய்யைச் சொல்லிவிட்டு போனைத் துண்டித்துவிட்டதாகவும் கூறுகிறான். அப்படியென்றால் தன்னைத் தேடி விசாகப்பட்டினம்தான் அவள் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணி, தேடும் முயற்சியில் விதார்த்தும், ஜெகனும் விசாகபட்டினம் பயணமாகிறார்கள். இறுதியில், ஜெயசிறீயை கண்டுபிடித்து சென்னைக்கு திரும்ப அழைத்து வந்தார்களா, விதார்த், இசாரா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads