வெந்து தணிந்தது காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெந்து தணிந்தது காடு பாகம் I, (Vendhu Thanindhathu Kaadu) 2022ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.[1] இத்திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்சு பிலிம் இன்டர்நேசனல் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் செயன்ட் மூவிசின் மூலம் வெளியிட்டார். மும்பையைச் சேர்ந்த சித்தார்த்து நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2]
Remove ads
நடிகர்கள்
- முத்துவாக சிலம்பரசன் (முத்துவீரன்)
- பாவையாக சித்தி இட்னானி
- முத்துவின் தாயாக ராதிகா சரத்குமார்[3]
- சரவணனாக அப்புக்குட்டி
- சிரீதரனாக நீரஜ் மாதவ்
- நாயகன் திரைப்படத்தில் வரும் ஐயர் கதாபாத்திரமாக டெல்லி கணேஷ்
- படா பாய் கர்சியாக சாரா [4]
- குட்டி பாயாக மலையாள நடிகர் சித்திக்
- முத்துவின் தங்கையாக ஏஞ்சலினா அபிரகாம்
- துர்காவாக துளசி
திரை இசை
இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இது, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வரிசையில் கெளதம் மேனன் - ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும்.
பாடல்கள்
இப்படத்தின் பாடல் உரிமையை திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றது.[5] இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2, 2022 அன்று நடைபெற்றது.[6]
கவிஞர் தாமரை அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads