வெப்பம் (இயற்பியல்)

From Wikipedia, the free encyclopedia

வெப்பம் (இயற்பியல்)
Remove ads

இயற்பியல், வேதியியல், பொறியியல், வெப்பஇயக்கவியலில், வெப்பம் (Heat) என்பது ஒருவகை ஆற்றல் ஆகும்.[1].</ref>[2][3][4][5][6] இது வேலை தவிர்த்த வேறு எந்த வழியில் உற்பத்திசெய்யக்கூடிய அல்லது மற்றொரு உடல், பிராந்தியம், அல்லது வெப்பவியக்கவியல் அமைப்பிற்கு மாற்றப்படக்கூடிய ஆற்றலாக உள்ளது.[7] சாதாரண மொழியில், தொழில்நுட்ப மொழி இருந்து மாறுபட்டதாக, வெப்பம் என்ற வார்த்தைக்குப் பரந்த பொருள் உண்டு. வார்த்தைகளின் பல்வகைமையை மறந்து பயன்படுத்தினால் இந்தக் குழப்பம் உண்டாகும்.

Thumb
அணுக்கரு இணைவு மூலம் சூரியனில் வெப்பம் உருவாக்கப்படுகிறது. இது மின்காந்த கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகிறது. இது புவியில் உயிர் வாழ்வதற்கான மூலாதாரமாக விளங்குகிறது

வெப்ப இயக்கவியலில், வெப்பக் கதிர்வீச்சு, உராய்வு மற்றும் பாகுத்தன்மை மூலம் மற்றும் இரசாயன சிதறல் முலம் வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் அல்லது பரிமாற்றலாம்.

பொறியியலில் வெப்பப் பரிமாற்றம்; திணிவுப் பரிமாற்றம் மூலம், கதிர்வீச்சு, வெப்பச்சலனம் மூலம், மற்றும் வெப்பக் கடத்தலின் மூலமான வெப்ப பரிமாற்றத்தை கருதுகிறது.

மிகவும் சூடான அல்லது குளிர்ச்சியான உடலில் வெப்ப கடத்தல் மற்றும் கதிரியக்க பரிமாற்றம் தன்னிச்சையானதாக உள்ளது.

வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி சமமான அல்லது அதிக வெப்பநிலையில் உள்ள உடலில் இருந்து மற்றொரு உடலிற்கு ஆற்றல் பரிமாற்றம் வெப்ப எக்கி மூலமான இயந்திர வேலை, அல்லது இதற்கு ஒத்த செயல்முறை உதவியுடன் செய்யலாம் என்கிறது. இதன்போது பிரபஞ்ச இயல்பாற்றல் அதிகரிக்கும் அதேவேளை குளிரான பொருளின் இயல்பாற்றல் வெப்பத்தை அதிலிருந்து உறிஞ்சுவதால் குறைகிறது.

இயற்பியலில், குறிப்பாக வெப்பஅளவீடு, மற்றும் வானிலை ஆய்வில், உள்ளுறை வெப்பம் மற்றும் உணர்வெப்பம் கருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெப்பத்துடன் தொடர்புடைய ஒரு குழப்பமான சொல்லாக வெப்ப ஆற்றல் உள்ளது. இது ஓர் அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றலைப் பற்றி கூறுகிறது. ஓர் அமைப்பை அல்லது பொருளைச் சூடாக்கும் அல்லது குளிர்விக்கும் போது அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.

Remove ads

வெப்பக் கடத்தல்

திடப் பொருள்களில் வெப்பக்கடத்தல் முறையில் மட்டுமே வெப்பம் பரவுகிறது, திடப் பொருளின் ஒருமுனை வெப்பப்படுத்தப்படும்போது, அம்முனையிலுள்ள அணுக்களும் மூலக்கூறுகளும் அதிக கிளர்ச்சிக்கு உட்பட்டு அதிகமான வீச்சுடன் அதிர்வுறத் துவங்கும். இந்த மாறுபாடு அருகிலுள்ள மூலக்கூறுகளுக்குக் கடத்தப்படும்.

வெப்பச்சலனம்

பாய்மத்தில் உள்ள துகள்களின், இயக்கத்தின் மூலமாகவே வெப்பம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படும் நிகழ்வு, வெப்பச் சலனம் எனப்படும். பாய்மத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்பம் அடைந்த பகுதி விரிவடைவதால் குறைவான அடர்த்தியைப் பெறுகிறது. அப்பகுதி மேலே எழும்போது, அவ்விடத்தை குளிர்ந்த மேற்பகுதிகள் நிரப்புகின்றன. மீண்டும் குளிர்ந்த பகுதிகள் வெப்பமேற்றப்படுவதால் அவை மேலெழும். அவ்விடத்தை குளிர்ந்த பகுதிகள் மீண்டும் நிரப்பும். இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். இவ்வகையில் நடைபெறும் வெப்ப மாற்றம், மூலக்கூறுகளின் இயக்கமின்றியே ஆற்றல் கடத்தல் நடைபெறும் வெப்பக் கடத்தல் முறையிலிருந்து மாறுபட்டதாகும்.

Remove ads

வெப்பக்கதிர்வீச்சு

பருப்பொருள் ஊடகத்தின் உதவியின்றி வெப்பம் மாற்றப்படும் நிகழ்வினை வெப்பக் கதிர்வீசல் என்கிறோம். ஒரு பொருளிலிருந்து, அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுவது, வெப்பக் கதிர்வீச்சு எனப்படும். வெப்பக் கதிர்வீச்சு பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது.

  1. பொருளின் வெப்பநிலை,
  2. கதிர்வீசும் பொருளின் தன்மை.

வெப்பக்கதிர் வீச்சின் பொதுவான பண்புகள்:

  1. ஒளிஅலைகளைப் போல் வெப்பக் கதிர்வீச்சும் நேர் கோட்டில் பயணிக்கின்றது.
  2. ஒளிஅலைகளைப் போல், சீரான பரப்பில் விலக்க விதியினைக் கொண்டுள்ளது. ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்தில் செல்லும்போது விலக்கமுறுகிறது.
  3. ஒளிஅலைகளைப் போல் அதே திசைவேகத்தில் பயணிக்கிறது.
  4. ஒளிஅலைகளைப் போல் ஒரு புள்ளியில் குவிக்கப்பட முடியும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads