வெப்ப மண்டலச் சூறாவளி

வலுவான காற்று மற்றும் நிறைய மழையுடன் பெரிய திருப்புமுனை From Wikipedia, the free encyclopedia

வெப்ப மண்டலச் சூறாவளி
Remove ads

சுழலும் தாழ்வளியழுத்தப் பகுதியை நடுவில் கொண்ட வெப்பமண்டலத்தில் உருவாகும் ஒரு புயலின் வகையே வெப்ப மண்டலச் சூறாவளி (Tropical Cyclone )ஆகும். இதில் தாழ்மட்ட வளிமண்டலச் சுழற்சியே நிலவும். இது பொதுவாக உயர் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்த பெருங்கடல்களில் தோன்றும். இதில் வலிவான காற்றும் சுருள் வடிவிலான பெருமழை பொழியக்கூடிய இடிபுயல்களும் அமைந்திருக்கும். இது தோன்றும் இடத்தையும் அதன் காற்று வலிமையையும் கொண்டு அதனைப் பலவகையில் வேறுபடுத்தலாம். அவை, விசைச்சூறை (/ˈhʌrɪkən, -kn/),[1][2][3] கடுஞ்சூறை (/tˈfn/), வெப்ப மண்டலப் புயல், சூறைப்புயல், வெப்ப மண்டலத் தாழ் அழுத்தம், அல்லது வெறுமனே சூறாவளி என்பனவாகும்.[4] விசைச்சூறை என்பது அத்திலாந்திக் பெருங்கடலிலும் வடகிழக்கு அமைதிப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும். கடுஞ்சூறை என்பது வடகிழக்கு அமைதிப் பெருங்கடலில் தோன்றுவதாகும். சூறாவளி தென் அமைதிப் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் ஏற்படுவதாகும்.[4]

Thumb
பன்னாட்டு விண்வெளி நிலைய ஏழாம் தேட்டப் பயணத்தில் எடுத்த இசபெல் இடிப்புயல் (2003) இன் காட்சி. வெப்ப மண்டலச் சூறாவளிகளின் பான்மைகளாகிய புயலின் கண்ணையும் கண்சுவரையும் சூழவுள்ள மழைப்பட்டையையும் (முகிற்கூட்டத்தையும்) தெளிவாகக் காணலாம் .
Thumb
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து மார்ச் 26, 2004 இல் கட்டரீனா என்னும் புயல் உருவாவதை எடுத்தப் படம். புயலின் கண் நடுவே தெரிவதைப் பார்க்கலாம்

வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஒப்பீட்டளவில் வெதுவெதுப்பான மாபெரும் நீர்நிலைகள் மீதே தோன்றுகின்றன. இவை தம் ஆற்றலை பெருங்கடல்களின் மேற்பரப்பு நீரின் ஆவியாதலில் இருந்து பெறுகின்றன, இந்த ஆவியாதல், ஈரக்காற்று மேலெழும்போது, குளிர்தலால் தெவிட்டலுற்று, மீள்சுருங்கலால் முகில்களாகவும் பின்னர் மழையாகவும் உருமாறுகின்றன. இவற்றின் ஆற்றல் வாயில் நடு அகலாங்கு சூறாவளிகளான வடகீழைப் புயல்களில் இருந்தும் ஐரோப்பிய காற்றுப்புயல்களில் இருந்தும் வேறுபடுகிறது. பின்னவை தம் ஆற்றலை முதன்மையாக கிடைநிலை வெப்பநிலை வேறுபாட்டில் இருந்து பெறுகின்றன. வெப்ப மண்டலச் சூறாவளியின் வலிமையான சுழற்காற்று, சுழலச்சுக்கு உள்முகமாக காற்று பாயும்போது அதற்கு புவியின் சுழற்சி தரும் கோண உந்த அழியாமை இயல்பால் ஏற்படுகிறது. இந்த விளைவால், இவை நிலநடுவரைக்கு 5 பாகை வடக்கிலும் தெற்கிலும் அமைந்த அமைதி மண்டலத்தில் உருவாதல் இல்லை.[5] வெப்ப மண்டலச் சூறாவளிகளின் விட்டம் ஏறத்தாழ 100 முதல் 2,000 கி.மீ. வரையில் அமைகிறது. ஆப்பிரிக்க கீழைத்தாரை விளைவால் இவை தென் அரைக்கோளத்தில் அருகியே அமைகின்றன. அத்திலாந்திக் பெருங்கடலிலும் அமெரிக்காசிலும் வெதுப்பான நீரால் உருவாகும் இப்புயல்கள் வட அரைக்கோளத்தில் தோன்றுகின்றன. மேலும் நிலநடுவரைக்குத் தெற்காக அமையும் குத்துநிலைக் காற்றுத் துணிப்பு விசை அங்கு, வெப்ப மண்டலத் தாழ்வழுத்தமும் புயல்களும் வெப்ப மண்டலச் சூறாவளிகளாக உருவாதலைத் தவிர்க்கின்றன.

வெப்பமண்டலம் என்பது இச் சூறாவளி தோன்றும் புவிக்கோளப் பகுதியைக் குறிக்கும். பெரும்பாலும் இவை வெப்ப மண்டலப் பெருங்கடல்களிலேயே தோன்றுகின்றன. சூறாவளி இதன் சுழற்சித் தன்மையைக் குறிக்கிறது. இவற்றில் வடக்கு அரைக்கோளத்தில் காற்று இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் காற்று வலஞ்சுழியாகவும் சுழலும். காற்றுச் சுற்றோட்டத்தின் எதிர்திசை கொரியாலிசு விளைவால் ஏற்படுகிறது.

வெப்ப மண்டலச் சூறாவளி அச்சமூட்டும் மழையையும் கடற்கொந்தளிப்பையும், அச்சமூட்டும் காற்றையும் உருவாக்கும். கடலை அண்மித்த பகுதிகளையே பொதுவாக இது தாக்கினாலும், சிலவேளைகளில் கடலிலிருந்து சேய்மையில் அமைந்த பகுதிகளையும் தாக்குவதுண்டு.[6]

உள்நாட்டுப் பகுதிகளைவிட கடற்கரைப் பகுதிகள் வெப்ப மண்டலச் சூறாவளிகளால் பெரிதும் தாக்கப்படுகின்றன. இந்தப் புயல்களுக்கான முதன்மையான ஆற்றல் வாயிலாக வெம்மையான பெருங்கடல் நீர் அமைகிறது. எனவே இவை கடற்கரையருகில் வலிமை மிக்கனவாகவும் உள்ளே நிலம் நோக்கி நகர நகர விரைந்து தம் வலிமையில் குன்றுகின்றன. கடற்கரைச் சிதைவு கடுங்காற்று, மழியாலும் பேரலைகளாலும் புயல் உருவாக்கும் கடும் அழுத்த மாற்றங்களால் தோன்றும் அலையெழுச்சிகளாலும் கடும் புயல்களின் விளைவாலும் நிகழ்கிறது. வெப்ப மண்டலச் சூறாவளிகள் மிகப்பெரும் பரப்பில் இருந்து காற்றை தன்னுள் இழுக்கிறது. கடும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு இது மாபெரும் பரப்பாக அமையும். அந்தக் காற்றில் உள்ள நீரைச் (இதில் வளிமண்டல ஈரமும் கடல்நீர் ஆவியாக்க ஈரமும் அடங்கும்) செறிவாக மிகவும் சிறிய பரப்பில் மழையாகப் பொழிகிறது.மழை பொழிந்ததும், ஈரம் பொதிந்த காற்று தொடர்ந்து பதிலீடு செய்யப்படுவதால், மிக்க் கடும் மழை பொழிந்து, கடற்கரையில் இருந்து 40 கி.மீ. வரை ஆற்றில் உள்நோக்கி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். இது அவ்வட்டார வளிமண்டலம் தாங்கும் நீரளவினும் பன்மடங்கானதாகும்.

இவை மக்கள்தொகைக்குப் பேரழிவை ஏற்படுத்தினாலும் வறட்சிநிலையைத் தவிர்க்க உதவுகின்றன. இவை வெப்ப ஆற்றலை வெப்ப மண்டலத்தில் இருந்து மிதவெப்ப அகலாங்குகளுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதால், வட்டார, புவிக் கோளக் காலநிலையைச் சமனப்படுத்துகின்றன.

Remove ads

புறநிலைக் கட்டமைப்பு

Thumb
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து நபி கடுஞ்சூறையின் காட்சி, 2005 செப்டம்பர் 3.

வெப்ப மண்டலச் சூறாவளிகள் வளிமண்டலத்தின் வெப்ப அடுக்குக் கோளத்தில்அமையும் ஒப்பீட்டளவில் தாழ்வான அழுத்த பகுதிகளாகும். அதேநேரத்தில் கடல்மேற்பரப்பிலும் தாழ் குத்துயரங்களிலும் மிக உயரழுத்த அலைவுகள் நிலவும். நம் புவியில், வெப்ப மண்டலச் சூறாவலிகளின் மையத்தில் அளக்கப்பட்ட அழுத்தம், கடல்மட்டத்தில் நோக்கப்பட்ட அழுத்த அளவீடுகளைவிட குறைவாகவே அமைகிறது.[7] வெப்ப மண்டலச் சூறாவளி மையத்திற்கு அண்மையில் உள்ள சுற்றுச்சூழல் அனைத்துக் குத்துயரங்களிலும் வெளிச் சூழலைவிட வெம்மையாக அமைகிறது. எனவே இப்புயல்கள் "வெம்மையான அகட்டுப்" பான்மையைப் பெற்றுள்ள அமைப்புகளாக விளங்குகின்றன.[8]

காற்றுப் புலம்

வெப்ப மண்டலச் சூறாவளியின் மேற்பரப்பு அருகில் அமையும் காற்றுப் புலம் கண்ணைச் சுற்றிலும் வேகமாகச் சுழன்றபடி அதன் உள்நோக்கிப் பாயும் பான்மையைக் கொண்டுள்ளது. புயலின் வெளிவிளிம்பில், காற்று ஏறக்குறைய அமைதியாக அமையும்; என்றாலும், புவியின் சுழற்சியால், காற்ரு அங்கே சுழியாகாத தனிக்கோண உந்த்த்தைப் பெற்றுள்ளது. காற்று ஆரநிலையில் உள்நோக்கிப் பாய்வதால், தன் கோண உந்தத்தைப் அழியாமல் பேண, அது சுழலும் புயலாக, குறிப்பாக வட அரைக்கோளத்தில் இடஞ்சுழியாகவும் தென் அரைக்கோளத்தில் வலஞ்சுழியாகவும் சுழலத் தொடங்குகிறது. அதன் உள்ளாரப் பகுதியில், காற்று வெப்ப அடுக்குக் கடப்புவெளி வரை மேலெழுகிறது. இந்த ஆரம் கண்சுவரின் உள்ளாரத்தோடு பொருந்திவிடுகிறது. இவ்வாரத்துக்குள் புயலின் வலிமையான மேற்பரப்பருகு காற்று வீசுகிறது; எனவே, இவ்வாரம் பெருமக் காற்றாரம் என வழங்கப்படுகிறது.[9] மேலே சென்றதும், காற்று புயலின் மையத்தை விட்டு வெளியே பாயத் தொடங்குகிறது. அப்போது அடுக்குமுகில் அரணை உருவாக்குகிறது.[10]

இந்நிகழ்வுகள் அச்சுச் சீரொருமை வாய்ந்த காற்றுப் புலத்தை உருவாக்குகின்றன: மையத்தில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். பெருமக் காற்றாரம் நோக்கி வெளியே செல்ல செல்ல காற்றின் வேகம் விரைவாக உயர்ந்துகொண்டே போகும். பின்னர் படிப்படியாக குறைந்தபடி மிகப்பெரிய ஆரத்தில் அருகிவிடும். என்றாலும், காற்ருப் புலத்தில் வெளிசார்ந்தும் கால அடைவிலும் வேறுபாடுகலைப் பெற்றமையும். இவ்வேறுபாடுகளுக்கான காரணிகளாக, கள நிகழ்வுகளான வளிமண்டல வெப்பச் சுழற்சியும் (இடிப்புயல் செயல்பாடு), கிடைநிலைப் பாய்வின் நிலைப்பின்மைகளும் அமைகின்றன. குத்துநிலைத் திசையில் மேற்பரப்பு அருகில் வலியதாகவும் உயரம் செல்ல செல்ல குறைந்தபடி வெப்ப அடுக்கின் உச்சியில் அருகிவிடும்.[11]

கண்ணும் மையமும்

Thumb
வட அரைக்கோள விசைச்சூறையின் விளக்கப்படம்
2014 ஆம் ஆண்டு ஆர்த்தர் விசைச்சூறையின் நாசா எடுத்த அசைவூட்டப்படம். இது மழைவீதத்தையும் உள்கட்டமைப்பையும் காட்டுகிறது. இது கோளக மழைபொழிவு அளக்கைச் செயற்கைக்கோளில் இருந்து படம் பிடிக்கப்பட்டது

முதிர்ந்த வெப்ப மண்டலச் சூறாவளியின் மையத்தில், காற்று அதில் அமிழுமே தவிர எழாது. பிகப் போதுமான வலிமையுள்ள புயலில், முகிலாக்கத்தையும் தடுக்கும் அளவுக்கு ஆழ அடுக்கில் பாயும். இதனால் தெளிவாகத் தெரியும் "கண்" அப்போது உருவாகும்". கடல் மிகவும் கொந்தளிப்பில் இருந்தாலும் கண்ணின் வானிலை முகிலின்றி அமைதியாகவே இருக்கும்.[12] இந்தக் கண் வட்ட வடிவில் இருக்கும். இதன் விட்டம் 30 முதல் 65 கி.மீ. வரை அமையும். என்றாலும், 3 கி.மீ. விட்டமுள்ள சிறிய கண்களும் 370 கி.மீ. விட்டமுள்ள பெரிய கண்களும் கூட நோக்கப்பட்டுள்ளன.[13][14]

கண்ணின் வெளிவிளிம்பு "கண்சுவர் ஆகும். இந்தக் கண்சுவர் உயரத்தினைப் பொறுத்து விளையாட்டரங்க மேடையைப் போல விரிந்துகொண்டே செல்லும்; இந்நிகழ்வு சிலவேளைகளில் விளையாட்டரங்க விளைவு என வழங்கப்படுகிறது.[14] கண்சுவயின் அருகே பெருமக் காற்று வேகங்களும் விரைந்த காற்று மேலெழுச்சியும் உயர் குத்துயர முகில்களும் பெருங்கன மழைபொழிவும் அமையும். வெப்ப மண்டலச் சூறாவளியின் கண்சுவர் நிலத்தைக் கடக்கும்போது பேரளவுக் காற்று அழிபாடு ஏற்படும்.[12]

Thumb
Remove ads

வெப்ப மண்டலச் சூறாவளி தோன்றும் பகுதிகள்

உலகத்தில் உள்ள ஏழு பெரும் புயல் உண்டாகும் தளங்களாவன:

  • வட அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி
  • பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி
  • பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதி
  • இந்திய பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி,
  • இந்திய பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதி
  • இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதி.

உலகம் முழுவதிலும் ஓராண்டில் ஏறத்தாழ 80 புயற்காற்றுகள் ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads