வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம்map
Remove ads

வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம் (Wellington Regional Stadium), வணிகமுறையில் வெஸ்ட்பேக் விளையாட்டரங்கம் (Westpac Stadium) நியூசிலாந்தின் வெல்லிங்டனில் அமைந்துள்ள முதன்மையான விளையாட்டரங்காகும். இதன் வடிவத்தையும் சில்வர் வண்ண வெளிப்புறச் சுவர்களையும் கொண்டு வெல்லிங்டனில் வசிக்காத சில வெளியூர்க்காரர்கள் இதனை "தி கேக் டின்" எனக் குறிப்பிடுகின்றனர்.[3] விளையாட்டரங்கின் கிண்ண அளவை 48,000 சதுர மீட்டர்களாகும்.

விரைவான உண்மைகள் வெல்லிங்டன் பிராந்திய விளையாட்டரங்கம் வெஸ்ட்பாக் விளையாட்டரங்கம், 'தி இசுடேடியம்' 'தி கேக் டின்' ...

இந்த அரங்கத்தை 1999இல் பிளெட்சர் கட்டுமான நிறுவனம் கட்டியது.[4] இது வெல்லிங்டன் தொடர்வண்டி நிலையம் போன்ற முதன்மை போக்குவரத்து வசதிகளுக்கு அருகில் உள்ளது. மீட்கப்பட்ட தொடர்வண்டி நிலத்தில் இது கட்டப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பிருந்த அத்லெடிக் பூங்கா அரங்கம் தகுதியற்று இருந்ததால் அதற்கு மாற்றாக இது கட்டப்பட்டது. மேலும் கூடிய கொள்ளளவு கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகளுக்கான அரங்கமாக இது கட்டப்பட்டது. தவிரவும் பெரும் திரளானோர் இரசிக்கக்கூடிய கச்சேரிகள் நடத்த இந்த அரங்கம் பயனாகின்றது.

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads