வெள்ளியந்தின்னனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெள்ளியந்தின்னனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 101 எண் கொண்ட பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

பெயர் விளக்கம்
புலவர் இறால் மீனின் அழகைப் பாடியுள்ளார். இறால்மீன் வெள்ளி போல் மினுக்கும். இறால் மீனைத் தின்றவர் என்ற என்னும் கோணத்தில் வெள்ளியம் தின்னனார் என்று இப்புலவர்க்குப் பெயர் சூட்டியுள்ளனர். பாடற்பொருளால் பெயர் பெற்ற புலவர் இவர்.
பாடல் சொல்லும் செய்தி
திணை - நெய்தல்; தலைவியைத் தனக்குத் தந்து உதவும்படி தலைவன் தோழியிடம் வேண்டுகின்ற பாடல் இது.
இறால் மீன் பச்சைமஞ்சள் போல இருக்கும். அந்த இறால் செல்வம் புன்னைமர நிழலில் காயும் பாக்கத்தில் பரதவர் மகளை நான் பார்ப்பதற்கு முன் நான் இனிமையாக வாழ்ந்தேன். இப்போது அவள் நினைவால் துன்புறுகிறேன், என்கிறான் தலைவன்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
