வெள்ளியின் வளிமண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1761-ஆம் ஆண்டில் மிக்காயில் லோமொநோசொவ் எனும் ரஷியர் , வெள்ளி கோளிற்கு வளிமண்டலம் இருப்பதை கண்டறிந்தார்[1][2]. அதன் வளிமண்டலம் பூமியினதை விட சூடானது மற்றும் அடர்த்தியானது. அதன் நில வெப்பநிலை 740 K(467 °C, 872 °F) மற்றும் அழுத்தம் 93 பார் ( 1 bar = 100 கிலோபாஸ்கல்; 1 atmosphere = 1.01325 bar). வெள்ளியின் வளிமண்டலத்தில் ஒளிப்புகாத கந்தக அமிலம் கொண்ட மேகங்கள் உள்ளதால், அதன் நிலப்பரப்பை தொலைநோக்கி மூலம் பார்க்க இயலாது. வெள்ளியின் நிலப்பரப்பைப் பற்றிய தகவல்கள் முற்றிலும் ரேடார் இமேஜிங் மூலமே பெறப்பட்டன. வெள்ளியின் முக்கிய வளிமண்டல வாயுக்கள் கரியமில வாயு மற்றும் நைதரசன். வெள்ளியின் வளிமண்டலம் மிக வேகமாக சுழன்று வருகிறது.ஒட்டுமொத்த வளிமண்டலம் அக்கோளை நான்கு பூமி நாட்களில் சுற்றிவிடுகிறது.[3] நொடிக்கு நூறு மீட்டர் எனும் வேகத்தில் காற்று அங்கே வீசுகிறது. ஆனால் நிலபரப்பை நெருங்க நெருங்க , காற்றின் வேகம் குறைந்து , நிலப்பரப்பில் ஒரு மணி நேரத்துக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது[4].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads