வெஸ்ட்மின்ஸ்டர்

From Wikipedia, the free encyclopedia

வெஸ்ட்மின்ஸ்டர்
Remove ads

வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தினுள் மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடிப்பகுதியாகும். இது தேம்சு ஆற்றின் வடகரையில் லண்டன் நகரத்தின் தென்மேற்கிலும் சாரிங் கிராசிலிருந்து தென்மேற்கே 0.5 மைல்கள் (0.8 km) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடங்கள் பல உள்ள காரணத்தால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இவற்றில் சிலவாக வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, பக்கிங்காம் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் மடம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயம் ஆகியன உள்ளன.

விரைவான உண்மைகள் வட்டாரம், நாடு ...

வரலாற்றின்படி மிடில்செக்சின் பகுதியான இதற்கு வெஸ்ட்மின்ஸ்டர் என்ற பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தை அடுத்துள்ள பகுதி - (வெஸ்ட்- மேற்கு மின்ஸ்டர் - தேவாலயம்) என்பதால் அமைந்தது. இதுதான் இங்கிலாந்து அரசின் இருப்பிடமாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் இருப்பிடமாகவும் ஆயிரம் ஆண்டுகளாக இருந்தது. ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் இயங்குகின்ற இங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Remove ads

வெளியிணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads