வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 (Statute of Westminster 1931) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டச் சட்டமாகும். இது திசம்பர் 11, 1931 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தன்னாட்சி உடைய பிரித்தானியப் பேரரசின் மேலாட்சி நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்துடனும் மற்ற மேலாட்சிகளுடனும் சமநிலையை அளித்தது. இந்தச் சட்டத்தை ஒத்த ஆனால் தனியான சட்டங்களை ஒவ்வொரு பொதுநலவாய இராச்சியமும் தங்கள் நாடாளுமன்றங்களில் உடனடியாகவோ அல்லது ஏற்பு வழங்கியபோதோ நிறைவேற்றின. இச்சட்டத்தினை விலக்கும் மாற்றுச் சட்டம் நிறைவேற்றப்படும்வரை இந்த பொதுநலவாய இராச்சியங்களில் இச்சட்டம் செயற்பாட்டில் உள்ளது. இந்த நாடுகளின் சட்டவாக்க அவைகளுக்கு முழுமையான விடுதலை கொடுப்பதுடன் பொதுநல இராச்சியங்களுக்கும் பிரித்தானிய அரசிக்கும் (அரசர்) இச்சட்டம் பிணைப்பை உருவாக்குகிறது.[2]
Remove ads
நினைவு விழா
தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஓர் பாகமாக இருக்கும் சில நாடுகள், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுறும் வண்ணம் கொண்டாடுகிறார்கள். கனடாவில் திசம்பர் 11 அன்று அரசக் கட்டிடங்களில் ஐக்கிய இராச்சியக் கொடி (கனடாவில் இது ரோயல் யூனியன் கொடி என்றழைக்கப்படுகிறது) பறக்கவிடப்படுவது கட்டாயமாகும்.[3] இதற்கான கொடிமரங்கள் இந்தக் கட்டிடங்களில் உள்ளன.
மேலும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
