வேட்டகண்ணன்

From Wikipedia, the free encyclopedia

வேட்டகண்ணன்
Remove ads

வேட்டகண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 389 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடல் சொல்லும் செய்தி
Thumb
குறும்பூழ்

காதலியைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்கிறான் காதலன். காதல் தலைவனுக்குக் குற்றேவல் செய்யும் ஒருவன் அவனது எண்ணத்தைச் செயலாக்கப்படுத்த எண்ணி 'அவளைத் திருமணம் செய்துகொள்வது நன்றோ!' என்று கூறினான். தலைவன் 'நன்று போலத்தான் தெரிகிறது' என்றான்.

இப்படிச் சொன்ன தலைவனுக்கும், விரைவுபடுத்தத் தூண்டிய அவனது பணியாளுக்கும் குறும்பூழ்ப் பறவையை நெய்யில் வறுத்துச் சோற்றுடன் விருந்து படைக்கவேண்டும் என்கிறாள், தலைவி.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads