வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

From Wikipedia, the free encyclopedia

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்
Remove ads

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் (Agricultuiral Research Station / ARS), திருப்பதிசாரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்.

Thumb
முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

தோற்றம்

இது 1976 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற நெல் சாகுபடிக் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது .தொடக்கக்காலத்தில் இந்த ஆராய்ச்சி நிலைய வளாகம் விவசாயத் துறையின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. 1981 ஆம் வருடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இவ்வளாகம் வழங்கப்பட்டது.

Remove ads

நெல் இரகங்கள் கண்டுபிடிப்பு

இவ்வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இதுவரை ஐந்து இரங்கள் டிபிஎஸ் (TPS) எனும் பெயரில் வெளியிடப்பட்டு இருக்கின்றன. திருப்பதிசாரம் என்பதன் சுருக்கமே டிபிஎஸ் ஆகும்.

  • டிபிஎஸ்-1
  • டிபிஎஸ்-2
  • டிபிஎஸ்-3
  • டிபிஎஸ்-4
  • டிபிஎஸ்-5.

இது எங்கு உள்ளது

நாகர்கோவில் அருகில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 47B) யில் திருப்பதிசாரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. நால்கால்மடம் என்ற இடத்திலிருந்தும் சுமார் அரை கி.மீ. தூரம் மற்றும் "ஓட்டாபீஸ்" எனும் இடத்திலிருந்தும் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

நெல் இரகங்கள்

இந்த் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இரகங்கள் பின் வருமாறு[1]

மேலதிகத் தகவல்கள் வெளியிடப்பட்ட இரகங்கள், ஆண்டு ...
Remove ads

அண்மையில் வெளியிடப்பட்ட ரகம்

அண்மையில் டிபிஎஸ் 5 என்ற 118 நாளில் 6100 கிலோ நெல்லை அறுவடையாகக் கொடுக்கக்கூடிய புதிய இரகம் வெளியிடப்பட்டது.

மற்ற ஆராய்ச்சிகள்

  1. விதை நெல் உற்பத்தி
  2. தோட்டக்கலை ஆராய்ச்சிகள்
  3. சுற்றுச்சூழல் மேம்பாடு
  4. பூச்சி நோய் நிர்வாகம்

வேளாண்மைக் கல்லூரி

இந்த ஆராய்ச்சி நிலையத்தை வேளாண்மைக்கல்லூரி அல்லது தோட்டக்கலைக் கல்லூரியாக மாற்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டுஇருக்கிறது[2]

ஆராய்ச்சி நிலையப் பண்ணை

அராய்ச்சி நிலையப் பண்ணையில் மண்புழு உரம் உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, ஆய்வகம், வாழை, மாமரம், முருங்கை மரங்கள் போன்ற பயிர்கள், ஆடு வளர்ப்பு, வரப்பு புல் (bund grass) மற்றும் மீன்கள் ஆகிய செயல்பாடுகள் நடைபெறுவதால் பண்ணைக்கு உபரி வருமானம் கிடைக்கிறது.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads