வே. சுப்பிரமணியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வே. சுப்பிரமணியம் (இறப்பு: திசம்பர் 13, 2016) எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்துவந்தவர். முல்லைமணி என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர். இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கி கௌரவித்தது. பாடசாலை அதிபர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கொத்தணி அதிபர், பிரதம கல்வி அதிகாரி, மாவட்ட கல்விப்பணிப்பாளர் முதலான பதவிகளை வகித்து திறம்பட சேவை புரிந்தவர்.
இவரது 'பண்டாரவன்னியன்' வரலாற்று நாடகம் இதுவரை ஐந்து பதிப்புகள் கொண்டு வெளியாகியதுடன் இன்றுவரை நாடகமாகவும் கூத்தாகவும் பேணப்பட்டு வருகின்றது.
இவரது கலை ஆக்கங்கள் இன்னும் தொடர்ந்து வந்தவண்ணமே உள்ளன.
Remove ads
இவரது ஆக்கங்கள் சில
- பண்டாரவன்னியன் - வரலாற்று நாடகம்
- மல்லிகைவனம் - 1985
- வன்னியின் கதை
- கொக்கிளாய் மாமி
- அரசிகள் அழுவதில்லை - 1977
- கொண்டுவந்த சீதனம் - 2005
- வன்னியர் திலகம் - 1996
- கமுகஞ்சோலை - 2000
- இலக்கியப்பார்வை- 1999
- வன்னியியற் சிந்தனை - 2001
- தமிழ்மொழி பயிற்சி - 1975
- மழைக்கோலம் – நாவல் – 2003
- இலங்கையின் பல கோயில்களுக்கு ஊஞ்சற் பதிகங்களையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
சுப்பிரமணியனின் 65 ஆண்டுகால எழுத்துலகப் பங்களிப்பை பாராட்டி, 2016ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு வழங்கி கௌரவித்தது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads