வைக்கிங் திட்டம்

From Wikipedia, the free encyclopedia

வைக்கிங் திட்டம்
Remove ads

வைக்கிங் திட்டம் (Viking Mission) என்பது செவ்வாய்க் கோளை ஆராய்வதற்கென நாசா நிறுவனம் தயாரித்த ஒரு விண்வெளிப் பயணத் திட்டமாகும். வைக்கிங் 1, வைக்கிங் 2 என இரண்டு விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டன. இதன் மொட்த்தாச் செலவு கிட்டத்தட்ட $1.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஆகஸ்ட் 20, 1975 இல் வைக்கிங் 1 ஏவப்படட்து. அதே ஆண்டு செப்டம்பர் 9 இல் வைக்கிங் 2 ஏவப்பட்டது. இரண்டும் "ஒழுக்குச் சிமிழ்" எனப்படும் Orbiter Capsule, மற்றும் "தளச் சிமிழ்" எனப்படும் Lander Capsule ஆகியவற்றைக் கொண்டு சென்றன. இரண்டு விண்வெளிக் கப்பல்களும் வெற்றிகரமாக செவ்வாயை அடைந்து பல விபரங்களை வண்ணப் படங்களுடன் பூமிக்கு அனுப்பின.

Thumb
Thumb
வைக்கிங் ஒழுக்குச்சிமிழ் (நாசா)
Thumb
வைக்கிங் 2 அனுப்பிய படம்

வைக்கிங்-1 ஏவிப் பத்து மாதங்களில் செவ்வாய்க் கோளைச் சுற்ற ஆரம்பித்து, ஜூலை 20, 1976 இல் செவ்வாயில் தரையிறங்கியது. அதே நேரம் வைக்கிங் 2 அதே ஆண்டு ஆகஸ்ட் 7 இல் செவ்வாய்க் கோளைச் சுற்றி வர ஆரம்பித்து, செப்டம்பர் 3, 1976 இல் தரையிறங்கியது.

Remove ads

வைக்கிங் திட்ட முடிவு

இரண்டு வைக்கிங் விண்கலங்களினதும் முடிவுகள் பின்வருமாறு:

மேலதிகத் தகவல்கள் கலம், திரும்பி வந்த நாள் ...

அனைத்து வைக்கிங் திட்டமும் முடிவில் மே 21 1983 இல் கைவிடப்பட்டது.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads