வை. சச்சிதானந்தசிவம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வை. சச்சிதானந்தசிவம் (மாமனிதர் ஞானரதன் மே 22, 1940- ஜனவரி 18,2006, அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. ஈழத்து ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குநர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஓய்வில்லாமல் எழுதிக் கொண்டிருந்தவர். நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்கள், குறும்படங்கள், முழுநீளப்படங்களின் மூலகர்த்தா. ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவர். தமிழீழத் தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவர். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் சதா கருத்துப் போர் நடாத்தியவர்.
Remove ads
பரிசில்கள்/விருதுகள்
இவரது சிறந்த படைப்புளுக்காக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பலமுறை பரிசில்களை வழங்கி மதிப்பளித்துள்ளார். இலங்கை முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க இவரை அழைத்த போது இவர் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது. இவரது இனப்பற்றுக்கும், விடுதலைப்பற்றுக்கும் மதிப்பளித்து இவரது நற்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக இவருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் மாமனிதர் பட்டம் வழங்கப் பட்டது.
Remove ads
ஓவியங்கள்
வரைந்த/வடிவமைத்த முகப்போவியங்கள் சில
இவரது நூல்கள்
- ஊமை உள்ளங்கள் (நாவல்)
- புதிய பூமி (நாவல்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads