ஸ்டாக்ஹோம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 (டிசம்பர் 2007) மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் சுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

Remove ads
புவியியல்
ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்தியபகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன குங்ஸோல்மென் (Kungsholmen), சொடர்மல்ம் (Södermalm), நொர்மல்ம்(Norrmalm), மற்றும் ஒஸ்டர்மல்ம் (Östermalm) என்பவையாகும். குங்ஸோல்மென் மற்றும் சொடர்மல்ம் என்னும் இரண்டும் தீவுகளாகும். இங்க்கு பற்பல தீவுகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பற்பல தீவுகளும் பாலங்களால் இணைக்கப்பட்டே இருக்கின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் மத்திய பகுதியில் மட்டும் பதினான்கு தீவுகள் காணப்படுகின்றன. ஸ்டாக்ஹோம் நகரத்தின் 30% வீததிற்கும் மேலதிகமான பகுதி நீர் வழியினாலேயே ஆக்கப்பட்டுள்ளது. மற்றைய 30% வீதப் பகுதியும் பூங்காக்களாலும் புல்வெளிகளாலும் மூடப்பட்டுள்ளது.
கம்லா ச்டான் (Gamla Stan) எனும் நகரமே ஸ்டாக்ஹோம் நகரத்தின் மிகவுய்ம் பழமை வாய்ந்த பகுதியாகும், அதாவது பழமையான நகரம் ஆகும்.
இதன் சராசரியான வருடாந்த வெப்பநிலை 10 °C (50 °F) ஆகும். ஸ்டாக்ஹோம் நகரத்தின் சராசரியான வருடாந்த மழைவீழ்ச்சி முப்பது தொடக்கம் அறுபது வரையியான இன்ஞ்சஸ் ஆகும்.
Remove ads
கல்வி
விஞ்ஞானத்தில் ஆய்வுகளுக்கும் மேல்ப் படிப்புக்களுக்கும் ஆனதுமான கல்வி ஸ்டாக்ஹோம் நகரத்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கத் தொடங்கியது. மருத்துவக்கல்வியும் ஸ்டாக்ஹோம் அவதான நிலையம் போன்ற பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் 18ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கப் பட்டன. ஸ்டாக்ஹோம் நகரத்தில் மருத்துவக் கல்வியானது 1811 ஆம் ஆண்டில் கரோலின்ஸ்கா மையமாக இறுதியாக முறைப்படுத்தப்பட்டது. ஸ்டாக்ஹோம் நகரத்தில் ரோயல் தொழில்நுட்ப நிறுவனம் 1827 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் ஸ்காண்டிநேவியா எனும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனமே ஸ்டாக்ஹோமில் உள்ள மாபெரும் தொழினுட்ப உயர்கல்வி நிறுவனம் ஆகும். ஸ்காண்டிநேவியா தொழினுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 13,000 மாணவர்கள் மட்டில் கல்வி கற்கின்றனர்.
Remove ads
ஸ்டாக்ஹோமின் மக்கள் வகைப்பாடு
சுவீடனின் மொத்த சனத்தொகையில் ஸ்டாக்ஹோமின் சனத்தொகை 22% வீதமாகக் காணப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் ஸ்டாக்ஹோம் நகரத்தினால் சுவீடனுக்கு 29% வீத வருமானம் கிடைக்கின்றது.
ஸ்டாக்ஹோம் நகரத்தின் சனத்தொகை (ஆண்டுகள் வாரியாக)
அருங்காட்சியகங்கள்

ஸ்டாக்ஹோம் நகரம் உலகிலுள்ள அருங்காட்சியகங்கள் பற்பல உள்ள அருங்காட்சியக-நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு அருங்காட்சியகங்கள் 100 மட்டில் உள்ள்ன, இங்கு பல மில்லியன் கணக்கான மக்களும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போவார்கள்.
காலநிலை
Remove ads
இணைப்புகள்
- இலங்கைத் தூதரகம் ,ஸ்டாக்ஹோல்ம் பரணிடப்பட்டது 2018-01-06 at the வந்தவழி இயந்திரம்.
- இந்தியத் தூதரகம், ஸ்டாக்ஹோம் பரணிடப்பட்டது 2011-08-17 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads