ஸ்ரீமத்பாகவதம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஸ்ரீமத் பாகவதம் வியாசர் வடமொழியில் இயற்றிய 18 புராணங்களில் மிகச் சிறப்பானது. 18000 சுலோகங்களைக் கொண்டது என்று மரபுவழக்காகச் சொல்லப்பட்டாலும், உரைநடையிலுள்ள பகுதிகள் 38 எழுத்துக்கொரு சுலோகம் என்ற விதிப்படி கணக்கிடப்பட்டாலொழிய 15000 சுலோகங்களும் நீண்ட உரைநடைப் பகுதிகளும் கொண்டது. புராணக் கதைகளுடன் ஆன்மிகதத்துவங்கள் வெகு நேர்த்தியாகவும் ஆழமாகவும் பின்னப்பட்டிருக்கும் நூல். இதிலுள்ளவேதாந்தக் கருத்துக்கள் உபநிடதக் கருத்துக்களின் அகலத்தையும் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு முக்கியமானவை. வேதங்களிலுள்ள ஞானகாண்டம் (மெய்யறிவை முதன்மையாகக் கொண்ட பகுதி), உபாசனாகாண்டம் (பக்தியை முதன்மையாகக் கொண்ட பகுதி) இவையிரண்டும் ஒன்றாகக் கோக்கப்பட்டிருக்கும் நூல். இந்து சமயத்தினரின் எல்லாப் பிரிவுகளினாலும் மிக உயர்வாகப் போற்றப்படும் நூல்.வேதங்கள், வான்மீகி ராமாயணம் இவைகளைப் போல் இப்புராணத்தின் வெறும் பாராயணமே சிறந்த ஆன்மிகப் பயனையும், உலகவாழ்க்கையில் நன்மைகளையும் கொடுக்கவல்லது என்ற நம்பிக்கையில் இந்துக் கோவில்களிலும் இல்லங்களிலும் உற்சவங்களிலும் பாரத நாடு முழுவதும் பூசிக்கப்பட்டு வாசிக்கப்படும் நூல். ஒருவன் இதைக் கேட்க விரும்பும்போதே ஆண்டவன் அவனுடைய உள்ளத்தைத் தூய்மையாக்குகிறான் என்பதே இதன் ஒப்பற்ற தனிப்பெருமை.

Remove ads

தோற்றமும் நாரதரின் தூண்டுதலும்

17 புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றிய வியாசர், 18-வது புராணமாக பாகவதத்தை இயற்றியதே நாரதரின் உந்துதலினால்தான். 17 புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றியும் வியாசருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் அவையெல்லாவற்றிலும் கதைப் போக்கை மையமாய் வைத்துக்கொண்டு இயற்றியதுதான் என்கிறார் நாரதர். ஆண்டவனுடைய பெருமைகளையும் தத்துவங்களையும் மையமாக வைத்து ஒரு பாகவதபுராணம் எழுதினால்தான் மன அமைதி கிடைக்கும் என்ற நாரதரின் கருத்தை[1] ஏற்கிறார் வியாசர். பகவானுடைய மஹிமையை தொடர்ந்து வர்ணித்து பாகவதத்தை இயற்றி தன் புத்திரன் சுகருக்கு உபதேசம் செய்தார். சுகபிரம்மம் என்று எல்லோராலும் போற்றப்பட்டவருமான சுகர் பாண்டவர்களுக்குப் பின் பட்டத்திற்கு வந்த பேரரசன் பரீக்ஷித்துக்கு எல்லா மகரிஷிகளின் முன்னிலையில் கங்கைக் கரையில் ஏழு நாட்களில் இதை எடுத்துச் சொன்னார். அஞ்ஞனம் உபதேசிக்கையில் சூதர் என்பவர் எல்லா மகரிஷிகளுடன் அதைக் கேட்கும் பாக்யத்தைப் பெற்றார். பின்பு கலியுகம் தொடங்கிய பின் நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலிய மகரிஷிகளுடைய வேண்டுகோளுக் கிணங்கி சூதர் பாகவதத்தைத் தாம் சுகரிடம் கேட்டதை எடுத்துரைத்தார்.

Remove ads

ஸப்தாஹம் என்ற திட்டமுறை

ஸப்தாஹம் என்றால் 'ஏழு நாட்கள் கொண்ட காலவரை'.இக்காலவரையில் ஸ்ரீமத்பாகவதத்தைப் படிப்பதும் கேட்பதும் ஒரு உயரிய திட்டமுறையாகக் கருதப்படுகிறது. சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு எடுத்துரைத்தார். அதுவே முதல் ஸப்தாஹம். அது கிருஷ்ணர் மறைந்து 30 ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. இருநூறு ஆண்டுகளுக்குப் பின் கோகர்ணர் என்பவரால் அடுத்த ஸப்தாஹம் நடந்தது. இதற்குப் பின்னர்தான் சூதர் நைமிசாரண்யத்தில் மற்ற ரிஷிகளுக்கெல்லாம் பாகவதத்தை எடுத்துரைத்தார்.

ஆனால் இதற்கு முன்னரே வேறு இரண்டுவிதமாக பாகவதத்தின் உட்கதைகள் சிலருக்குத்தெரிந்திருந்தது. படைப்புக் கடவுள் பிரம்மா பரம்பொருளிடமிருந்தே நேரிடையாக உபதேசம் பெற்று தன் புத்திரன் நாரதருக்கு பாகவதத்தின் சில கருத்துக்களை உபதேசித்திருந்தார். அவர் அவைகளை இந்திரபிரஸ்தத்தில் யுதிஷ்டிரர் அரசர் பதவி ஏற்றவுடன் நாரதரிடமிருந்து தெரிந்துகொண்டார்.இன்னொருவிதமாக, பிறந்ததிலிருந்தே மஹரிஷியாகிவிட்ட [சனத்குமாரர்]]—பிரம்மனின் நான்கு மானஸபுத்திரர்களில் ஒருவர் -- பரம்பொருளிடமிருந்து தெரிந்துகொண்டு, சான்க்யாயனருக்கு உபதேசித்தார். அவரிடமிருந்து பராசர மஹரிஷிக்கும் அவரிடமிருந்து மைத்ரேயருக்கும் அவரிடமிருந்து விதுரருக்கும் உபதேசமாக வந்தது. இதனால் சூதர் மற்ற மஹரிஷிகளிடம் தான் சுகரிடம் கேட்டதைச் சொல்லும்போது, சில சமயம் மைத்ரேயர் சொல்லியதாகவும், சிலசமயம் நாரதர் சொல்லியதாகவும், சில சமயம் சுகரே சொல்வதுபோலும் சொல்கிறார்.

Remove ads

ஒரு மேலோட்டம்

பாகவதத்தில் 12 ஸ்கந்தங்கள் உள்ளன. முதலிரண்டு ஸ்கந்தங்கள் முகவுரையாக அமைகின்றன. பாரதப்போர் முடிவிலிருந்து கதை தொடங்குகிறது. பரீக்ஷித்தின் பிறப்பு, அவர் அரசனானது,ஒரு ரிஷிபுத்திரனின் சாபத்தை சம்பாதித்துக்கொண்டது, அதன் காரணமாக கங்கைக் கரையில் விரதமிருந்து சுகரிடம் பாகவதம் கேட்கத் தொடங்கியது, பிரம்மன் பரம்பொருளிடமிருந்து நான்கே சுலோகத்தில் பாகவதத்தை உபதேசம் பெற்றது, முதலிய விபரங்கள் இம்முதலிரண்டு ஸ்கந்தங்களில் அடங்கும்.

கபில கீதை

துருவனின் கதை

ஜடபரதர் கதை

பூகோளவிவரணம்

பிரம்மனின் ஒரு பகல்

அஜாமிளன் கதை

பிரகலாதன் கதை

அம்பரீஷர் கதை

பாற்கடல் கடைதல்

கஜேந்திர மோட்சம்

கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜா தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல, பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. கதை முடிந்தது என்று நினைத்த கஜேந்திரன், ஆதிமூலமே என்று அலறியது. அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் புள்ளேறி ( கருடன்), சுதர்சன சக்கரத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சம் அளித்தான்.[2]

தத்துவம்: வாழ்க்கையில் வறுமைப் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவும் செய்வதறியாமல் துடிப்பவர்கள், விரோதிகளின் மத்தியில் மாட்டிக் கொண்டு உயிருக்குப் பயந்து கொண்டிருப்பவர்கள், நல்லவர்களின் சாபத்தினால் பலவாறு அவதிப்படுபவர்கள், நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருப்பவர்கள். அத்தனை பேர்களும் தங்களது கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு பகவான கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர் காத்து அருள்வான்

பத்தாவது ஸ்கந்தம்: கிருஷ்ணர்

பதினொராவது ஸ்கந்தம்; உத்தவ கீதை

முடிவு

உரைகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads