ஸ்ரீமாதா டிரஸ்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீமாதா டிரஸ்ட் அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இலவசத் தங்குமிடமும் உணவும், சிகிச்சையும் வழங்கி உதவும் அமைப்பு. ஸ்ரீமோகன்தேவி ஹிராசந்த் நஹார் என்னும் ராஜஸ்தானியர் புற்று நோய்க்கான இலவசக் காப்பகத்தைச் சென்னையில் அமைத்தார். பணப்பற்றாக்குறையாலும் நிர்வகிக்கத் தகுந்த நிர்வாகிகள் இல்லாததாலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையால் நிர்வகிக்க இயலவில்லை. இதனால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் செயல் தலைவரும் மருத்துவருமான வி. சாந்தா இதனைப் பராமரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்துமாறு காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் ஸ்ரீமாதா டிரஸ்ட் என்ற அமைப்பு திரு.வி.கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் அமைக்கப்பட்டு, காஞ்சி மடத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 1954 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. [2]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads