ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் என்பது தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் தயாரிக்கப்பட்ட தொன்மவியல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ் மொழியில் அக்டோபர் 22, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும், கன்னடம் மொழியில் அக்டோபர் 15, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஜீ கன்னடம் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. [1][2] இது மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஜீ கன்னடம் தொலைக்காட்சியில் பிப்ரவரி 2, 2019 அன்று 85 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 23, 2019 அன்று 84 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச் சுருக்கம்
இந்த தொடர் இந்து சமயத்தின் முக்கியமான கடவுள்களில் ஒருவரும் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளும் ஆன மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் மற்றும் அவரது மனைவி லட்சுமி தேவியுடனான காதலைப்பற்றியும் விளக்குகின்றது.
நடிகர்கள்
நடிகர்களின் தேர்வு
இது ஒரு இரு மொழித் தொடர் என்றாலும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் கன்னட தொலைக்காட்சி நடிகர்கள் ஆவார். இந்த தொடரில் கடவுள் விஷ்ணு கதாபாத்திரத்தில் 'அமித் கஷாப்' என்ற புதுமுக நடிகர் நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக லட்சுமி தேவி என்ற காதாபாத்திரத்தில் நிஷா என்பவர் நடிக்கின்றார்.
மொழிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads