ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம்
ஜெர்மனியின், ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹம் காமாட்சி அம்பாள் ஆலயம் (ஆங்கிலம்: Hindu Kamadchi Ampal Temple, Hamm Germany) என்பது ஜெர்மனி நாட்டிலுள்ள ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். ஐரோப்பிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய இந்துக் கோயிலான இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1] இது காமாட்சி அம்மனுக்கு இந்தியா மற்றும் தென் ஆசியா பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள ஒரே கோயிலாகும். வடக்கு ரைன்-வெஸ்ட்பலியா மாகாணத்தில் 3000 இந்துகள் உட்பட மொத்தம் 45,000 இந்துக்கள் ஜெர்மனியில் வசிக்கிறார்கள்.
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வடிவில் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கிழக்கு பார்த்த கோயிலாக அமைந்துள்ளது.[2] இக்கோயிலில் சிவன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி நாராயணர், நவக்கிரகம், ஐயப்பன் மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.[3]
Remove ads
படக் காட்சியகம்
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads