ஹரவிலாசமு
15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்கு இலக்கியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரவிலாசமு (Haravilāsamu) என்பது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெலுங்குக் கவி ஸ்ரீநாதர் என்பவரால் தெலுங்கு மொழியில் பிரபந்த பாணியில் எழுதப்பட்ட ஒரு கவிதை அமைப்பாகும். சைவ சமயம் பற்றிய நூல்களில் இதுவும் ஒன்று (ஹர என்றால் சிவன்).
Remove ads
உள்ளடக்கம்
பிரபந்தம் ஏழு ஆசுவாசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது ஆசுவாசங்கள் சிரியலா என்பவரைப் பற்றிய கதையையும், மூன்றாவது மற்றும் நான்காவது ஆசூவாசங்கள் கௌரியின் திருமணத்தைப் பற்றியும், ஐந்தாவது பார்வதி மற்றும் பரமேசுவரரின் சுற்றுப்பயணத்தைப் பற்றியும், ஆறாவது ஆலகாலத்தை விழுங்குவது பற்றியும், ஏழாவது அர்ச்சுனனுக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான போரை விவரிக்கும் கிருதார்ச்சுனியத்தைப் பற்றியும் விவரிக்கிறது.
Remove ads
வெளியீடுகள்
இது 1916இல் வாவில்லா ராமசுவாமி சாத்திரி என்பவரால் நிறுவப்பட்ட வாவில்லா அச்சகம் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1] இது 1966 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது [2] விசுவநாத சத்தியநாராயணாவின் முன்னுரையுடன் 2013 இல் எம்.எஸ்.கோ பதிப்பகம் வெளியிட்டது.[3]
பிற மொழிகளில்
ஹரவிலாசம் மற்ற இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. கே.வெங்கடராமப்பா என்பவர் கன்னட மொழியில் எழுதினார்.[4]
பிரசித்தி பெற்ற கலாச்சாரம்
ஹரவிலாசா, 1941 இல் கோச்சர்லகோலா ரங்காராவ் என்ற இயக்குநரின் இயக்கத்தில் தெலுங்குத் திரைப்படமாக எடுக்கப்பட்டது; ஸ்ரீநாதர் வேடத்தில் வேமுரி காக்கையா நடித்திருந்தார்.
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads