ஹர்கத்-உல்-முஜாகிதீன்

From Wikipedia, the free encyclopedia

ஹர்கத்-உல்-முஜாகிதீன்
Remove ads

ஹர்கத்-உல்-முஜாகிதீன் (Harkat-ul-Mujahideen- al-Islami, உருது: حرکت المجاہدین الاسلامی‎) சுருக்கமாக ஹெச்.யு.எம் (HUM) என்று அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் இருந்து இயக்கும் தீவிரவாத அமைப்பு ஆகும். இதனுடைய தீவிரவாதச் செயல்கள் அனைத்தும் இந்தியாவின் காஷ்மீர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.[1]

Thumb
ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் கொடி

உருவாக்கம்

இக்குழு முதலில் ஹர்கர்-உல்-அன்சார் என்ற பெயரில் இயங்கியது. 1997 ஆம் ஆண்டு இக்குழுவானது ஒசாமா பின் லேடனுடன் தொடர்புடையது என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.[1][2][3] அதன் பின் இக்குழு தனது பெயரை ஹர்கத்-உல்-முஜாகிதீன் என மாற்றிக் கொண்டது. இந்தக் குழுவானது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இந்தக் குழுவானது 1980 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்பால் ஆஃப்கானில் சோவியத் படைகளுக்கெதிராக போரிட அமைக்கப்பட்டது.[4] இந்தக் தீவிரவாதக் குழுக்களுக்கு ஐ.எஸ்.ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.[5]

Remove ads

விமானக் கடத்தல்

999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்திலிருந்து 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது.இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தல் இந்தக் குழுவால் நடத்தப்பட்டது ஆகும்.

இங்கிலாந்தில் தடை

2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தியதி இங்கிலாந்து நாட்டு உள்துறை அமைச்சு இந்த இயக்கத்தைத் தடை செய்தது. மேலும் இவ்வியக்கத்தோடு தொடர்புடையவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads