ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்[3][1][4][5]
1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads