ஆர்வர்டு பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்வர்டு பல்கலைக்கழகம் ("ஹார்வர்டு பல்கலைக்கழகம், Harvard University) ஐக்கிய அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் உலகத்தின் மிக பிரபலமான தனியார் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பல்கலைக்கழகமும் ஆகும். சான் ஆர்வர்டு (John Harvard) என்னும் மதகுரு ஒருவரால் 1639-ஆம் ஆண்டு இது தொடங்கப்பெற்றது. 1869 முதல் 1909-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத் தலைவராக விளங்கிய சாரலசு இலியாட்டு இதை உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி கல்லூரியாக உருவாக்கினார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூலகம்தான் உலகத்திலேயே மிகவும் அதிக நூல்கள் கொண்ட கல்லூரி நூலகமாக விளங்குகிறது, அது தவிர பொது நூலக வரிசையில் நான்காவது பெரிய நூலகமாகவும் விளங்குகிறது.
2019 கணக்கின்படி, உலகத்திலேயே அதிக நன்கொடை (40.9 பில்லியன் அமெரிக்க வெள்ளி) பெறும் கல்லூரிகளில் ஆர்வர்டு முதல் இடம் வகிக்கிறது.[1] இப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை தமிழ்மொழி வகுப்புகளை நடத்தி வருகின்றது.[5]. செப்டம்பர் 2022 முதல், சங்கம் தமிழிருக்கைப் பேராசிரியர் மார்த்தா ஆன் செல்பி வழிகாட்டுதலில் புதிய தமிழ்சார்ந்த ஆய்வு கறிபித்தல் தொடங்கவுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads