ஹைலாகாண்டி மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஹைலாகாண்டி மாவட்டம்map
Remove ads

ஹைலாகாண்டி மாவட்டம் அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஐலாகாண்டி நகரம் ஆகும். இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.

விரைவான உண்மைகள் ஹைலாகாண்டி மாவட்டம் হাইলাকান্দি, நாடு ...
Remove ads

பொருளாதாரம்

இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது.[3]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர்.[4]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர்.[4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4] இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads