1896 சிலாபம் கலவரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும்.[1]

அரிசித் தட்டுப்பாடு

அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கலவரம் வரை வளர்ந்தது.

வதந்திகள்

அரிசிவிலை மட்டுமன்றி இவ்விரு இனத்தவர்களுக்குமிடையில் வேறு சில காரணங்களால் சில காலமாக ஏற்பட்டிருந்த பாதிப்புக்களும் இக்கலவரத்திற்குத் தூண்டுதல் தந்துள்ளன. கத்தோலிக்க சிங்களப் பெண்கள் முஸ்லிம்களால் கடத்தப்பட்டார்கள் அல்லது கற்பழிக்கப்பட்டார்கள் என்ற கதைகள் அப்போது அதிகம் உலவிவந்தன. இது இரு சாராருக்குமிடையில் மனக்கசப்பை வளர்த்தது.

கைகலப்புக்கள்

டிசம்பர் 26 1896ல் சிலாபம் நகரவீதிகளில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவ சிங்களவர்களுக்குமிடையில் கைகலப்புக்கள் நடந்தன. சிலாபம் நகரில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. ஒருவரின் தலை உடைக்கப்பட்டதுடன், சிலர் காயமடைந்தனர். முஸ்லிம்களை பன்றிகளாகச் சித்தரிக்கும் படங்கள் மதில்களில் ஒட்டப்பட்டன.

கலவரம் அடக்கப்படல்

கலவரத்தை அடக்குவதற்காக கொழும்பு, மாறவில போன்ற இடங்களிலிருந்து காவல்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடைகள் பூட்டப்பட்டன. வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதத்தால் நகரமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். காவல்படையினரின் பாதுகாப்புடன் கடைகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரம் தொடரும் என்ற அச்சம் இருந்ததால் சுமார் 6 மாதகாலம் நகரை காவல்படையினரின் காவல் செய்தனர்.

மேற்கோள்கள்

உசாத்துணை:

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads