1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக மூன்றாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the III Olympiad) அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் செயின்ட். லூயிசில் ஆகத்து 29 இலிருந்து செப்தெம்பர் 3, 1904 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது சூலை 1 முதல் நவம்பர் 23, 1904 வரை நடைபெற்றுவந்த விரிவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் அங்கமாக அமைந்திருந்தது. இது செயின்ட் லூயிசில் இருந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்போது பிரான்சிசு தடகளம் என அறியப்படும் தடகள அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலம் பெரும்பான்மையாக பேசப்படும் நாடொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாக இருந்தது. அவ்வாறே ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளும் இதுவே ஆகும்.[1]
இந்த ஒலிம்பிக் போட்டிகள் லூசியானா கொள்முதல் கண்காட்சியின் (Louisiana Purchase Exposition) அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.[2]
Remove ads
பங்குபெற்ற நாடுகள்

நீலம் = முதன்முதலாக பங்கேற்றவர்கள்
பச்சை = முன்னதாக பங்கேற்றவர்கள்.
மஞ்சள் சதுரம் நடத்துகின்ற நகரமான (செயின்ட் லூயிஸ்)

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 12 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.[3] செயின்ட் லூயிசிற்கு வருவதற்கு ஏற்பட்ட தடங்கல்களாலும் உருசிய-சப்பானியப் போரினாலும் வட அமெரிக்காவைத் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து 52 போட்டியாளர்களே கலந்து கொண்டனர்.
ஆத்திரேலியா
ஆஸ்திரியா
கனடா
கியூபா
பிரான்சு
செருமனி
பெரிய பிரித்தானியா
கிரேக்க நாடு
அங்கேரி
தென்னாப்பிரிக்கா
சுவிட்சர்லாந்து
ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்க மிதிவண்டியாளர் பிராங்க் பிசோனி இத்தாலியின் போட்டியாளராகவும் கருதப்பட்டார்.[4] அவ்வாறே அமெரிக்க மற்போர் வீரர்கள் சார்லசு எரிக்சனும் பெர்னோஃப் ஆன்சனும் நோர்வேஜியப் போட்டியாளர்களாகக் கருதப்பட்டனர்.[5]
Remove ads
பதக்கப் பட்டியல்
1904 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற முதல் 10 நாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

Remove ads
மேற்சான்றுகள்
மேலும் அறிய
பிற வலைத்தளங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads