1982 பொதுநலவாய விளையாட்டுக்கள்
12வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி From Wikipedia, the free encyclopedia
Remove ads
1982 பொதுநலவாய விளையாட்டுக்கள் (1982 Commonwealth Games) ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்திலுள்ள பிரிசுபேன் நகரத்தில் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. திறப்பு விழா பிரிசுபேன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான நாதனில் உள்ள ராணி இரண்டாம் எலிசபெத்து விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் இந்நிகழ்வின் தடகள மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.[1] மற்ற நிகழ்வுகள் சாண்ட்லரில் உள்ள சிலீமன் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.

நீதிபதி எட்வார்டு வில்லியம்சு 1982 பொதுநலவாய விளையாட்டுக்களின் தலைவராக இருந்தார்.[2] 1978 ஆம் ஆன்டு நட்டைபெற்ற தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாவ்லோ பெரீரா போட்டிக்கான சின்னத்தை வடிவமைத்தார்.[3]
Remove ads
பங்கேற்பாளர்கள்
காமன்வெல்த் அமைப்பின் 46 உறுப்பு நாடுகளும் அதன் ஆட்சி பகுதியில் இருந்தும் சுமார் 1582 தடகள வீரர்கள் பங்கேற்றனர் .
விளையாட்டுக்கள்
தடகளம், வில்வித்தை, இறகுப்பந்து, குத்துச்சண்டை, மிதிவண்டி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் போன்ற பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads