1991 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1991 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (1991 Census of India ) 13 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். முன்னதாக இக்கணக்கெடுப்புப் பணி 1871[1] ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையென அதுவரை 12 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இக்கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 838,583,988[2] ஆகும். கணக்கெடுப்புப் பணியில் 1.6 மில்லியன் நபர்கள் கணக்கெடுப்பாளர்களாக பணிபுரிந்தனர்.[1]
Remove ads
மத அடிப்படையில் மக்கள் தொகை
1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் 69.01 கோடி நபர்கள் இந்துக்கள் (81.53%) ஆவர். 10.67 கோடி நபர்கள் இசுலாமியர்கள் ஆவர்.[3]
இந்தியாவில் உள்ள பிரதானமான சமயக் குழுக்களின் மக்கள் தொகைப் போக்குகள் 1951 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு அடிப்படையில் இங்கு தரப்பட்டுள்ளது.
Remove ads
மொழித் தரவுகள்
1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1576 மொழிகள் தாய்மொழியாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகளாக 22 மொழிகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகளாக 50 மொழிகளும், 10,000 நபர்களுக்கு மேல் தாய் மொழியாகப் பேசக்கூடிய மொழிகள் 114 எனவும் கணக்கிடப்பட்டன. எஞ்சியிருக்கும் பிற மொழிகளை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மொத்தமாக 566,000 நபர்கள் எனவும் அறியப்பட்டது.[4] 1991 கணக்கெடுப்பின்படி சமசுகிருதம் மொழியை 49,736 நபர்கள் பேசினர்.[5]
Remove ads
வேறுசில புள்ளி விவரங்கள்
- 1991 ஆம் ஆண்டு அடிப்படையில் கணக்கெடுப்பில் உள்ள மொத்த ஊர்களின் எண்ணிக்கை 1702.[6]
- கிளர்ச்சி காரணமாக 1991 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.[7] எனவே இம்மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை அங்குள்ள சமயக்குழுக்களின்[8] தரவுகள் மூலம் கணிக்கப்பட்டது.
- முன்னதாக 1981 ஆம் ஆண்டில் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சியால் அசாம் மாநிலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவில்லை. அப்பொழுதும் வரைபட முறையிலேயே கணிக்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
புற் இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads