2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு

From Wikipedia, the free encyclopedia

2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு
Remove ads

2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு என்பது சூலை 30, 2012 அன்று வட இந்தியாவில் 14 இந்திய மாநிலங்களில் நிலவிய திடீர் மின்வெட்டும்[1] மறுநாள் சூலை 31இல் 21 மாநிலங்களைப் பாதித்த மின்வெட்டையும் குறிக்கின்றது. இதுவே உலகளவில்[2] மிகப்பெரும் இருட்டடிப்பாக 600 மில்லியன் (60 கோடி) மக்களை [3][4][5] அதாவது இந்தியாவின் பாதி மக்கள்தொகையை பாதித்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூலை 31 மாலை நிலவரப்படி வட இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களுக்கும் தலைநகர் தில்லிக்கும் பாதிக்கும் மேற்பட்ட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கும் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது.[6]

விரைவான உண்மைகள் நாள், நிகழிடம் ...
Remove ads

பின்னணி

இந்த மின்தடங்கலுக்கு முந்தைய வாரங்களில் புது தில்லியில் நிலவிய மிகுந்த வெப்பநிலையால் மின்தேவை எட்டியிராத அளவுகளுக்கு உயர்ந்திருந்தது. இந்தியாவில் பருவமழை வரத்தவறியதால் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான பாசன நீரேற்றிகளுக்காக கூடுதலான மின்சாரத்தை மின்வலையிலிருந்து (power grid) நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கதிகமாக உறிஞ்சிக் கொண்டன.[7] பருவமழை தாமதத்தால் நீர் மின்நிலையங்களின் உற்பத்தியும் குறைந்திருந்தது.[8]

பொதுவாகவே[9], இந்திய மின் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தை 1.2 % பாதிக்குமளவு பின்தங்கி வருகிறது.[9]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads