2013 வட இந்திய வெள்ளம்

From Wikipedia, the free encyclopedia

2013 வட இந்திய வெள்ளம்
Remove ads

சூன் 2013ல் வட இந்திய மாநிலங்களான உத்தராகண்டம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், மேற்கு நேபாளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் கடும் மழைப் பொழிந்தது. அதனைத் தொடர்ந்து கடும் வெள்ளப் பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டது. அரியானாவில் சில பகுதிகளிலும், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு திபெத் பகுதிகளில் சில இடங்களிலும் கடும் மழைப் பொழிந்தது. As of 22 சூன் 2013, 1,000 க்கம் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியாயினர்.[1] பாலங்கள் மற்றும் தரைவழிச் சாலைகள் சேதமுற்றதால் 70,000க்கும் மேற்பட்ட சமயப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டனர்,[3][4] அவர்களில் பலர் மீட்கப்பட்டனர்.[5][6] As of 23 சூன் 2013, about 22,000 people are said to be still stranded.[6][7] இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[8]

விரைவான உண்மைகள் அமைவிடம், இறப்புகள் ...
Thumb
சிம்லா
சிம்லா
டெஹ்ராடூன்
டெஹ்ராடூன்
Map of India showing Dehradun and சிம்லா, capitals of Uttarakhand and Himachal Pradesh states respectively.

உத்தரகாண்ட் அரசின் புள்ளிவிவரப்படி 25 சூன் 2013 அன்று பலியானோர் எண்ணிக்கை 822.[9]

Remove ads

தமிழர்கள்

தமிழகத்திலிருந்து உத்தரகண்டுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மீட்கப்பட்ட தமிழர்கள் தில்லியிலிருந்து சென்னை வரை வந்தடைய இலவச விமானப் பயணச்சீட்டும், ஊர் போய் சேர போக்குவரத்து வசதியும் தமிழக அரசின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது.

மீட்புப் பணி

இராணுவம் மற்றும் விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானப் படை வரலாற்றில் இல்லாத அளவில் அதிக அளவில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இராணுவத்தின் இந்த பணி பாராட்டப்படக்கூடியதாய் இருந்தது.

இம்மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி உட்பட இராணுவ அதிகாரிகள் 20 பேர் பலியாயினர். அதில் விமானியான 27வயது பிரவீன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads