2015 பாகாப் படுகொலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2015 பாகாப் படுகொலை (2015 Baga massacre) நைசீரியாவின் போர்னோ மாநிலத்தில் பாகா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் சனவரி 3,2015 முதல் சனவரி 7 வரை போகோ அராம் நடத்திய, சில அறிக்கைகளின்படி இன்னமும் நடத்துகின்ற, திரள் கொலைகளும் தாக்குதல்களும் ஆகும். சனவரி 3 அன்று இந்த நகரில் சாட், நைஜர், மற்றும் நைஜீரியாத் துருப்புக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த பன்னாட்டு கூட்டு செயல் படைப்பிரிவு தலைமையகத்தை போகோ அராம் தாக்கினர்; தொடர்ந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களை போகோ அராம் போராளிகள் கடத்திச் சென்றனர்; இவர்கள் சனவரி 7 அன்று திரளாகக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது.
இறந்தவர்கள் எண்ணிக்கை "கூடுதலாக" இருக்குமென்று கூறப்பட்டாலும் உண்மையான மதிப்பீடு கிட்டவில்லை; தப்பி ஓடிய உள்ளூர் அதிகாரிகளும் மக்களும் "2,000க்கும்" கூடுதலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது "காணப்படவில்லை" என்றும் கூறுகின்றனர்; ஆனால் சில அறிக்கைகளின்படி "குறைந்தது நூறு" உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகின்றன.[1][2][3][4] பல அரசு அலுவலர்கள் இவற்றை மறுத்துள்ளனர்; சிலர் எந்தப் படுகொலையும் நடக்கவில்லை என்றும் நைசீரியப் படைகள் போராளிகளை எதிர்த்து துரத்தி விட்டதாகவும் கூறுகின்றனர். இதனை உள்ளூர் அலுவலர்களும் மக்களும் தப்பிவந்தவர்களும் பன்னாட்டு ஊடகங்களும் மறுக்கின்றனர்.[5] [6][3]
பாகாவும் குறைந்தது 16 மற்ற ஊர்களும் எரியூட்டி அழிக்கப்பட்டதாகவும் 35,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சாட் ஏரியை கடக்கையில் பலர் மூழ்கி இறந்ததாகவும் இந்த ஏரியின் தீவுகளில் பலர் அடைபட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.[1][4] இந்தத் தாக்குதல்கள் மூலம் போகோ அராம் போர்னோ மாநிலத்தில் 70% பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.[2]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads