2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம் என்பது காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்தான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து கருநாடகத்தில் தமிழர் உடைமைகளுக்கும் உயிருக்கும் எதிராக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த கலவரத்தைக் குறிக்கும்.[1]

பின்னணி

கருநாடகத்தை காவிரியில் நீர் திறந்து விடச்சொல்லி தமிழ் நாடு தொடுத்த வழக்கில், 05 செப்டம்பர் 2016 அன்று உச்ச நீதிமன்றம் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிராக கலவரம் மூண்டது.[2] மேல்முறையீட்டில் கலவரம் காரணமாக விநாடிக்கு 15,000 என்பதற்கு பதிலாக 12,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் செப்டம்பர் 20 வரை அந்த அளவு நீரைத் தரவேண்டும் என்றது.[3] உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு 600 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று கருநாடக உள்துறை அமைச்சர் பரமேசுவர் ராவ் கூறினார்.[4] சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கருநாடக உள்துறை அமைச்சர் பரமேசுவர் ராவ் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.[5]

Remove ads

வன்முறை

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த கே. பி. என் டிராவல்சு பேருந்துகள் 30 தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.[6][7] தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரி நீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான உடனேயே பெங்களூரு மாண்டியா மைசூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை வெடித்தது.[8]

பெங்களூருவில் செப்டம்பர் 12 அன்று மாலை பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 14 இரவு வரை நீட்டிக்கப்பட்டது.[9]

கருநாடகத்தில் காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 9 அன்று கடையடைப்பும் மறியலும் நடந்தது.[10] மறியல் நடந்த ஒன்பதாம் தேதியிலிருந்து பதினாறாம் தேதி வரை இரு மாநில பேருந்துகளும் அடுத்த மாநிலத்துக்குள் நுழையவில்லை.[11]

செப்டம்பர் 12 அன்று மறியலுக்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என்றும் 15 அன்று ரயில் மறியலுக்கே தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் வாட்டாள் நாகராசு கூறினார்.[12] ரயில் மறியல் போராட்டத்துக்கு 15 செப்டம்பர் அன்று சில கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.[13] காவிரி நீரை திறந்து விட சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழுவடைப்பு நடந்தது , வட கருநாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை[14] சனதா தளம் (மதசார்பற்ற) 8-இந்தேதியில் இருந்து காவிரி தீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது.ஏமாவதி அணையில் அதிக நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது, அவ்வணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால்14-இந் தேதி நடக்கவிருந்த முழு அடைப்பை நிறுத்திவிட்டது [15]

மறியலின் போது பெங்களூருவில் உமேசு என்ற இளைஞர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார் [16] செப்டம்பர் 12 மறியல் அன்று கலவரம் நடைபெறும் என்ற பீதி காரணமாக, பெங்களூருவில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனஙக்ள் மூடப்பட்டிருந்தன. திரை அரங்குகளில் படம் திரையிடப்படவில்லை., பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன, நகர பேருந்துகள் குறைந்த அளவில் மட்டுமே இயங்கின. மாலை மெல்ல பெங்களூரு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது, நகர பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட தொடங்கியுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன [17] . உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறப்பு தொடரும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.[18]

Remove ads

வன்முறைக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள்

செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் கருநாடகத்தில் தமிழர் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் காவிரி நீர் வேண்டியும் பல்வேறு விவசாய அமைப்புகளாலும் வணிகர் அமைப்புகளாலும் முழு அடைப்பு நடந்தது. ஆளும் அதிமுக மற்றும் அதன் சார்பு தொழிற்சங்கங்கள் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. .[19] நாம் தமிழர் கட்சியின் விக்னேசு என்பவர் தீக்குளித்ததினால் 16 செப்டம்பர் அன்று மருத்துவமனையில் இறந்தார்.[20]

காவிரி நீர் திறப்பு தொடர்பாக கருநாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. இது எதிர்பாராத தீர்ப்பு என்றும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.[21]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads