2024 பாக்கித்தான் பொதுத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று336 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அறிவிக்கையும், தேர்தல் அட்டவணையும் வெளியிட்டது. இத்தேர்தலுடன் பாகிஸ்தானின் 4 மாகாணங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமாக இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், கோகர் அலி கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாக்கித்தான் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
Remove ads
பின்னணி
பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கடைசியாக 25 சூலை 2018 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற்றதால் தேர்தல்கள் நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [1]
Remove ads
தேர்தல் நடைமுறை
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[2] பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை யில், பாக்கித்தானின் 4 மாகாணங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள்
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads