அப்பல்லோ பொறியியல் கல்லூரி
சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பல்லோ பொறியியல் கல்லூரி (Apollo Engineering College) ( ஏ.இ.சி ) என்பது ஒரு தனியார், சுயநிதி, இருபாலர் கல்வி நிறுவனமாகும். இது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவால் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியானது 2007 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் 2,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. துறைகளிலும் திறண் அறைகள் உள்ளன, அவை எல்.சி.டி ப்ரொஜெக்டர்கள், ஓ.எச்.பி, மல்டிமீடியா கணினி அமைப்புகள் மற்றும் ஆடியோ / வீடியோ சாதனங்கள் போன்ற நவீன கற்பித்தல் கருவிகளைக் கொண்டுள்ளன.
கல்லூரியானது ஆறு இளங்கலை பாடப்பிரவுகளையும், மூன்று முதுகலை படப்பிரவுகளையும் கொண்டுள்ளது.
Remove ads
வழங்கப்படும் படிப்புகள்
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (4 ஆண்டுகள்)
- பி.இ. - மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
- பி.இ. - எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
- பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.டெக் - தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. - ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
முதுகலை படிப்புகள் (2 ஆண்டுகள்)
- எம்.இ. (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்)
- எம்.இ. (வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு)
- முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ)
Remove ads
விடுதி வசதிகள்
அப்பல்லோ பொறியியல் கல்லூரி விடுதி சுமார் 300 மாணவர்கள் மற்றும் 250 மாணவிகள் தங்குமிடமிட் கொண்டதாக, இரண்டு தனித்தனி விடுதி கட்டிடங்களைக் கொண்டுள்ளன.
நூலக வசதிகள்
கல்லூரியில் உள்ள நூலகமானது பொறியியல் அறிவியலின் பல்வேறு துறைகளைச்சார்ந்த நூல்களை கொண்டுள்ளது. மேலும் அறிவியல், மானுடவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை நூல்களையும் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு பத்திரிகைகளை இந்த நூலகம் பெற்று படிக்க வழங்குகிறது.
போக்குவரத்து
இக்கல்லூரியின் மாணவர்கள், ஊழியர்கள் போன்றவர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்ல 15 பேருந்துகளைக் கொண்டுள்ளது. இந்த பேருந்துகள் சுமார் 5.30 முதல் 6.00 மணி வரை வெவ்வேறு இடங்களிலிருந்து 18 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads