உருசியாவில் இனவாதம்

From Wikipedia, the free encyclopedia

உருசியாவில் இனவாதம்
Remove ads

உருசியாவில் இனவாதம் என்பது உருசியாவில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் ஆகும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்புடுகையில் உருசியாவில் இனவாதம் பலமடங்கு கொடுமையாக உள்ளது. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்களும் படுகொலைகளும் வழமையாக இடம்பெறுகிறது.

Thumb
உருசிய நியோ நாசி

புள்ளி விபரங்கள்

பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கைகளின் படி 28 நபர்கள் 2005 இல் இனவாதிகளால் கொல்லப்பட்டார்கள்.[1] 2006 இல் 252 தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டது, இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். 2007 இல் 31 பேர் கொல்லப்பட்டனர்.[2] அந்த அறிக்கையில் உருசிய காவல்துறையினர் முறைப்பாடுகளைக் ஏற்று செயல்படவில்லை என்றும், இனவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. Moscow Human Rights Bureau அறிக்கையின் படி 2008 இல் 49 பேர் கொல்லப்பட்டார்கள்.[3]

உருசியாவில் 50,000 -70000 நியோ நாசிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.[3][4].

Remove ads

கருத்தியல் பின்னணி

இவர்களின் கருத்தியல் பின்னணி செருமெனிய நாசி, ஐக்கிய அமெரிக்க குகுகு அமைப்பு ஆகியவற்றுடன் ஒத்தது, இணைந்தது. வெள்ளை ஆரிய மேலாண்மை இவர்களின் அடிப்படை வாதம். இதர இனத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அல்லது அடங்கி ஒதுஙகி வாழவேண்டு என்பது இவர்களது நிலைப்பாடு.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads