காஞ்சி நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சி நாடு (Kanchi) பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் தலைநகராக தற்கால காஞ்சிபுரம் விளங்கியது. காஞ்சி நாடு குறித்து மகாபாரத காவியம் பதிவு செய்துள்ளது. குருச்சேத்திரப் போரில் பங்கு கொண்ட இந்நாடு, வேத பண்பாட்டை பின்பற்றாத காரணத்தால், மிலேச்ச நாடுகளில் ஒன்றாக இந்தோ ஆரியர்களால் கருதப்படுகிறது.

மகாபாரதக் குறிப்புகள்
கௌரவர் அணியில்
குருச்சேத்திரப் போரில், கௌரவர் படைகளை, பரத கண்டத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நாட்டுப் படைகள் பாதுகாத்தனர். அவர்களில் காஞ்சி நாட்டுப் படைகளும் அடங்குவர். [1]
பாண்டவர் அணியில்
பாண்டவர் அணியிலும் காஞ்சி நாட்டுப் படைகள் கௌரவர் அணிக்கு எதிராக போரிட்டனர். [2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
