சமுத்ரிகா கடற்படை கடல்சார் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமுத்ரிகா கடற்படை கடல்சார் அருங்காட்சியகம் (Samudrika Naval Marine Museum) இந்தியாவின் போர்ட் பிளேரில் உள்ள அந்தமான் டீல் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கடல் சூழலின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [2] கடலின் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ்வைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தியக் கடற்படை இந்த அருங்காட்சியகத்தை நடத்துகிறது. [1] அந்தமான் தீவுகளின் வரலாறு, புவியியல் தகவல்கள், அந்தமான் மக்கள், தொல்பொருள் மற்றும் கடல்சார் வாழ்வு தொடர்பான வரலாற்றை வழங்கும் ஐந்து பிரிவுகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. [3] அந்தமான் டீல் இல்லத்திற்கு எதிரில் தெலானிபூர், போர்ட் பிளேயர் என்ற முகவரியில் இருக்கும் இந்த அருங்காட்சியகம் கடல் சூழலின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. தீவுகளைச் சுற்றியுள்ள கடலின் செல்கள், பவளப்பாறைகள் மற்றும் ஒரு சில வகையான வண்ணமயமான மீன்களின் பரந்த தொகுப்பும் இங்கு உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
