சூர்யகாந்த் சர்மா
இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூர்யகாந்த் சர்மா (Surya Kant -பிறப்பு பிப்ரவரி 10, 1962) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். மூத்தவர் என்ற மரபு பின்பற்றப்படும் போது, இந்தியாவின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் சர்மா இருப்பார்.[1] இவர் நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, ஒரு மூத்த வழக்கறிஞராக இருந்தார். மேலும் அரியானா அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
Remove ads
இளமை
சூர்யகாந்த் 1962ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தில் ஹிசார் மாவட்ட கிராமமான பெட்வாரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.[2] 1981ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், 1984ஆம் ஆண்டில் ரோத்தக்கில் மகரிசி தயானந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார். 2011ஆம் ஆண்டில் குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றார்.[3][4]
Remove ads
தொழில்
காந்த் 1984ஆம் ஆண்டில் அரியானாவின் ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் 1985ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் பணியினைத் தொடர்ந்தார். இவர் உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், வங்கிகள், பல்வேறு அரசு அமைப்புகளின் பிரதிநிதியாக வழக்காடினார். சூர்யகாந்த் 7 சூலை 2000 அன்று அரியானாவின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் மார்ச் 2001இல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சனவரி 9, 2004 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெறும் வரை அரசு தலைமை வழக்குரைஞர் பதவியிலிருந்தார். 2007 பிப்ரவரி 23 அன்று தேசியச் சட்ட சேவைகள் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ச்சியாக இரண்டு முறை நியமிக்கப்பட்டார். காந்த் பல மதிப்புமிக்க சட்டம் தொடர்பான மாநாடுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டார். அக்டோபர் 5, 2018 அன்று, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். 2019 மே 9 அன்று, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைத்தது. 24 மே 2019 அன்று, காந்த் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.[5][6][7] முதுநிலை மரபு பின்பற்றப்பட்டால், இவர் இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக இருப்பார்.[1]
Remove ads
குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்
மனித உரிமைகள், பாலின நீதி, கல்வி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் குறித்து ஏராளமான தீர்ப்புகளை காந்த் வழங்கியுள்ளார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் சூரியகாந்த் பணியாற்றிய காலத்தில், ஜஸ்வீர் சிங் தீர்ப்பை வழங்கினார். சிறைக் கைதிகளுக்குத் திருமண மற்றும் குடும்ப வருகைகளைச் செயல்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கச் சிறைச் சீர்திருத்தக் குழுவை அமைக்குமாறு பஞ்சாப் மாநிலத்திற்கு உத்தரவிட்டார்.[8]
குறிப்பிடத்தக்க உரைகள்
மே 2022இல் இமாச்சல பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சிறைச் சீர்திருத்தங்கள் குறித்த சொற்பொழிவை நிகழ்த்தியபோது, கைதிகளின் குடும்பங்களில் சிறைவாசத்தின் தாக்கம் குறித்து விவாதித்த காந்த், நீதிபதி வி. ஆர். கிருஷ்ணா ஐயர் முன்மொழிந்த 'வார இறுதி சிறை' என்று அழைக்கப்படும் சிறை நிர்வாகத்தின் புதுமையான முறையை நினைவு கூர்ந்தார்.[9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
