திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலடி விநாயகர் ஆலயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம்.
Remove ads
அமைவிடம்
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.
வரலாறு
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வந்த வணிகர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.[சான்று தேவை]
சிறப்பம்சம்
கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
திருவிழாக்கள்
சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.
Remove ads
உசாத்துணை
பண்டிதர் இ. வடிவேல் எழுதிய திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூல்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads