நரேஷ் யாதவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நரேசு யாதவ் (Naresh Yadav - AAP)(இந்தி: नरेश यादव) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் தில்லி சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் தில்லி சட்டமன்றத்திற்கு மகரவுலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[3][4]

விரைவான உண்மைகள் நரேசு யாதவ், Member of the தில்லி சட்டமன்றம் சட்டமன்றம் மகரவுலி ...
Remove ads

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் தில்லியில் பிறந்தார். சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் படித்து இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்றார்.[1][2]

அரசியல் வாழ்க்கை

இவர் தில்லி சட்டமன்றத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். 2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில், இவர் பதிவான வாக்குகளில் 51.06% வாக்குகளைப் பெற்று 16,591 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[5] In the தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020, he increased his vote share, polling 54.27% of the votes and won with a margin of 18,161.[6]

கொலை முயற்சி

2020 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் 11 பெப்ரவரி 2020 அன்று அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் இரவே, நரேசு யாதவ் ஒரு ஆலயத்திற்குச் சென்று திரும்பிய நேரம் இவரது பாதுகாப்பு வாகனம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் உடன் பயணித்த ஆம் ஆத்மி கட்சி தன்னார்வலர் ஒருவர் காயமடைந்தார்.[7] குற்றமிழைத்தவர் கைது செய்யப்பட்ட போது அந்த நபர் நரேசு மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் ஆகிய இருவருக்குமே அறிமுகமானவராக இருந்தார்.[8]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads