நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்

From Wikipedia, the free encyclopedia

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்map
Remove ads

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் யாழ்ப்பாண அரசுக் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

விரைவான உண்மைகள் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில், ஆள்கூறுகள்: ...
Thumb
நல்லூர் வீரமாகாளி அம்மன் தீர்த்தக் கேணி
Remove ads

வரலாறு

யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தி என்பவனால் தலைநகரமான நல்லூரின் மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக 1790களில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. அம்மன்னன் நல்லூர் நகரைக் கட்டியபோது அதன் நான்கு திசைகளிலும் கோயில்களை அமைத்ததாகவும், மேற்குத் திசையில் அமைக்கப்பட்டதே வீரமாகாளி அம்மன் கோயில் எனவும் அந்நூல் கூறும். இக்கூற்றை உறுதிப்படுத்துவதற்கான வேறு சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையாயின் இக்கோயில் கிபி 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது எனக் கொள்ள முடியும்.

குவைறோஸ் என்னும் போத்துக்கீசப் பாதிரியார் எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே காணப்பட்ட பகுதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது.

கிபி 1620 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் போத்துக்கீசரின் நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய இந்துக் கோயில்களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி 1700 களின் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர் ஆட்சியின் போதும், அதன் பின்னர் பிரித்தானியர் ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads