பாக்யோங் மாவட்டம்

சிக்கிமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

பாக்யோங் மாவட்டம்map
Remove ads

பாக்யோங் மாவட்டம் (Pakyong district) என்பது இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது பாக்யோங் நகரிலிருந்து நிர்வகிக்கப்படுகிறது.[2] கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் மூன்று உட்பிரிவுகளான பாக்யோங், ரங்க்போ, ரோங்லி உட்பிரிவுகள் 2021ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக பாக்யோங் உருவாக்கப்பட்டது.[3] முன்னாள் மாவட்டத்தின் மீதமுள்ள கேங்டாக் கேங்டாக் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. இது இப்போது வடமேற்கில் உள்ள பாக்யோங் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த மாவட்டம் இப்போது மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டம், பூட்டான், சீனா, சிக்கிமின் நாம்சி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் பாக்யோங் மாவட்டம், நாடு ...
Remove ads

மக்கள்தொகை

Thumb
நத்தாங் பள்ளத்தாக்கு பாக்யோங் மாவட்டம் (சிக்கிம்)
Thumb
சிக்கிம் பட்டுப்பாதை, பாக்யோங் மாவட்டத்தில் பனிப்பொழிவுடன்

பாக்யோங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 404 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 74,583 ஆகும்.[4]

போக்குவரத்து

சாலை

Thumb
தேசிய நெடுஞ்சாலை 717பி (இந்தியா) சூலுக், பாக்யோங் மாவட்டம் சிக்கிம்

பாக்யோங் மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு:

  • சிலிகுரியினீ கேங்டாக்குடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10, பாக்யோங் மாவட்டத்தில் இராங்க்போ மஜிதார் வழியாக சிங்தாம் வரை செல்கிறது.
  • பாக்ராகோட்டையினை கேங்டாக்குடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-717அ, பாக்யோங் மாவட்டத்தில் ரேஷி, ரெனாக் முதல் இராணிபூல் அருகே செட்டிபூல் வரை ரோரதாங் மற்றும் பாக்யோங் வழியாகச் செல்கிறது.[5]
  • ரெனாக், மென்லாவை நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-717ஆ, ஜுலுக், ரோங்லி வழியாக ஷெரத்தாங் பெரும்பாலும் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[6]
  • மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தையும் பாக்யோங் மாவட்டத்தையும் இணைக்கும் சிக்கிமின் மிக நீளமான சாலைப் பாலமான அடல் சேது பாலம் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Thumb
பாக்யோங் முதல் சிலிகுரி செல்லும் பேருந்து

தொடருந்து

தொடருந்து சேவையினை பொறுத்தமட்டில் பணிகள் கட்டுமான நிலையில் உள்ளது. சியோக்-ராங்போ தொடருந்து பாதை பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ராங்போ நகரில் முடிவடையும். இதனை கேங்டாக் வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வானூர்தி

சிக்கிமின் ஒரே வானூர்தி நிலையமான பாக்யோங் வானூர்தி நிலையம் பாக்யோங் மாவட்டத்தின் தலைமையகமான பாக்யோங்கில் அமைந்துள்ளது.

Thumb
பாக்யோங் வானூர்தி நிலையம், பாக்யோங் மாவட்டம், சிக்கிம்
Thumb
சிக்கிம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள பாக்யோங் வானூர்தி நிலையத்தில் ஓடுபாதை
Remove ads

சட்டமன்ற தொகுதிகள்

Thumb
கந்தாங் கிருஷ்ணா மந்திர் பாக்யோங் மாவட்டம் சிக்கிம்

பாக்யோங் மாவட்டத்தின் சிக்கிம் மாநிலத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

  • ரெனாக் சட்டமன்றத் தொகுதி
  • சுஜாச்சென் சட்டமன்றத் தொகுதி
  • மேற்கு பெண்டம் சட்டமன்றத் தொகுதி
  • கந்தாங்-மச்சோங் சட்டமன்றத் தொகுதி
  • நாம்சாய்போங் சட்டமன்றத் தொகுதி

முக்கியமான நகரங்கள்

Thumb
துசுலுக், ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம்

பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்

  • பாக்யோங்
  • ரங்க்போ
  • ரோரத்தாங்
  • ரெனாக்
  • ரோங்லி
  • மஜிதார்
  • கும்ரேக்
Thumb
சிக்கிம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள லுங்துங் காட்சி முனையிலிருந்து சூரிய உதயம்

காட்டுயிர் காப்பகங்கள்

Thumb
சிக்கிமின் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள பாங்கோலகா வனவிலங்கு காப்பகம்

பங்கோலாகா வனவிலங்கு சரணாலயம் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வட வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தின் நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, அரிதார் முல்கர்கா ரேச்சேலா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுமின் காப்புக் காடுகளும் சரம்சா தோட்டமும் பாக்யோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குப் பல்வேறு வகையான மலர் தாவரங்களும் விலங்குகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

Thumb
சிக்கிம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் நீல நிற இறக்கைகள் கொண்ட சிரிப்பான்
Remove ads

தாவரங்களும் விலங்குகளும்

Thumb
பங்கோலகா காட்டுயிரி காப்பகத்தில் செவ்வால் மைசோர்னிசு
Thumb
சிக்கிம் மாநிலத்தில்

பாக்யோங் மாவட்டத்தில் பல்வேறு வகையான தாவரங்களும் வனவிலங்குகளும் காணப்படுகின்றன. முக்கியமான விலங்குகளாக மாநில விலங்கான சிவப்பு பாண்டா, மாநில பறவையான டென்ட்ரோபியம் நோபில் மாநில மலர், ரோடோடென்ட்ரான் மாநில மரம் பாக்யோங் மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படுகின்றன.

Thumb
சிக்கிம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள புடாங், சுமின் ரிசர்வ் வனத்தில் உள்ள சதுர வால் கரிச்சான் குயில்
Thumb
சிக்கிம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சுமின் காப்புக் காடுகளில் சாம்பல் நிற சிரிப்பான்

பிற முக்கியமான காட்டு விலங்குகளில் பனிச்சிறுத்தை, இமயமலை கருப்புக் கரடி, மேகச் சிறுத்தை, பெரிய இந்திய புனுகுப் பூனை போன்றவை அடங்கும்.[7] சிக்கிம் அரசின் வனத்துறை, பாக்யோங் மாவட்டத்தின் பங்கோலகா வனவிலங்கு சரணாலயத்தில் 2019 சனவரியில் வங்காளப் புலி இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Thumb
சிக்கிம் ரோலெப் பாக்யோங் மாவட்டத்தில் நீல-முன் ரெட்ஸ்டார்ட்
Thumb
சிக்கிம் அரிட்டர் பாக்யோங் மாவட்டத்தில் வெள்ளை-மார்பளவு சிரிப்பான்
Remove ads

ஆறுகளும் ஏரிகளும்

ஆறுகள்

Thumb
சிக்கிமில் பாக்யோங் மாவட்டத்தில் மஜிதார் அருகே உள்ள தீஸ்தா ஆறு

மாநிலத்தின் மிகப்பெரிய ஆறான தீஸ்தா ஆறு பாக்யோங் மாவட்டத்தில் சிங்தாமிலிருந்து ராங்க்போ வரை பாய்கிறது.

சிக்கிமின் மூன்றாவது பெரிய ஆறாக விளங்கும் ரங்க்போ ஆறு, பாக்யோங் மாவட்டத்தின் ரோங்லி துணைப்பிரிவில் உள்ள மென்மேசோ ஏரியிலிருந்து உருவாகி, பாக்யோன்ங் துணைப்பிரிவு, ரோங்லி உட்பிரிவு கிராமங்கள், பாக்யோன் மாவட்டத்தின் நகரங்கள் வழியாகப் பாய்கிறது.

பாக்யோங் மாவட்டத்தில் உள்ள துசுலுக் அருகே உருவாகி பூட்டான், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் நோக்கிப் பாயும் ஜல்தாகா ஆறு.

பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய ஆறுகள் ரிச்சு கோலா, ரோங்லி கோலா, பாச்சே கோலா, ரேசி கோலா ஆகும்.

ஏரிகள்

Thumb
லம்போகாரி (அரித்தாரின் லகேயா, பாக்யோங் மாவட்டம் சிக்கிம்
Thumb
கந்தாங் இதய ஏரி, கந்தாங் பாக்யோங் மாவட்டம் சிக்கிம்

பாக்யோங் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள்

  • லம்போகரி, அரிதார்
  • கந்தாங் இதய ஏரி
  • ரோலெப்பின் கீழே உள்ள ரங்க்போ அணை ஏரி.
  • முல்கர்கா ஏரி (சிக்கிம்-மேற்கு வங்காள எல்லையில் அமைந்துள்ளது)
Remove ads

விளையாட்டு

Thumb
குளிர்காலத்தில் சிக்கிம் மாநிலம் பக்யோங் மாவட்டத்தில் உள்ள கந்தாங் பள்ளத்தாக்கு பனிச்சறுக்கு விளையாட்டிற்கு ஏற்றது

பாக்யோங் மாவட்டத்தின் இராங்க்போவில் அமைந்துள்ள சுரங்கத் துடுப்பாட்ட மைதானம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். சிக்கிம் துடுப்பாட்டச் சங்கத்திற்குச் சொந்தமான இந்த மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை, சி. கே. நாயுடு கோப்பை, கூச் பெகார் கோப்பை, விஜய் மெர்ச்சன்ட் கோப்பை போன்ற முக்கியமான துடுப்பாட்டக் கோப்பைகளுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.[8][9] பாக்யோங் மாவட்டத்தின் பிற முக்கிய விளையாட்டு மைதானங்கள் தூய சவேரியார் கால்பந்து மைதானம்-பாக்யோங், ரோங்லி மேளா மைதானம், ரெனாக் எஸ்எஸ்எஸ் மைதானம். சுஜாச்சென் எஸ்எஸ்எஸ் மைதானம், மத்திய பெண்டம் எஸ்எஸ்எஸ் மைதாவு போன்றவை ஆகும்.

Remove ads

கல்வி

Thumb
சிக்கிம் மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனம் கேட், மஜிதார் பாக்யோங் மாவட்டம் சிக்கிம்

பாக்யோங் மாவட்டத்தில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

சாதனைகள்

Thumb
தம்பி காட்சி முனை, துசுலுக்
  • சிக்கிமின் பாக்யோங் மாவட்டம் 8 இடத்தினை இந்திய மாநிலங்கள் 75-களிக்கிடையேயான ஆசாதி செ அந்தியோதயா 90 நாட்கள் போட்டியில் தேர்வில் அடைந்தது.[10]
  • சிக்கிமின் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள பாக்யோங் காவல் நிலையம் 2020ஆம் ஆண்டில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பின்படி நாட்டின் சிறந்த பத்து செயல்திறன் கொண்ட காவல் நிலையங்களில் ஏழாவது இடத்தில் உள்ளது.[11]
  • பாக்யோங் மாவட்டத்தின் ஐந்து நட்சத்திர உணவகமான விவந்தா சிக்கிம், ஆண்டின் சிறந்த உணவகம் என்ற எச்ஐசிஎசுஏ விருதை வென்றது.[12]
  • சிக்கிமின் பாக்யோங்கை சேர்ந்த 9 வயது சிறுமி ஜெட்சென் தோக்னா லாமா, 2022 சனவரி 22 அன்று ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சா ரே கா மா பா லில் சாம்ப்சு என்ற நிகர் காட்சி நிகழ்ச்சியில் வென்றார். [13][14]
Remove ads

படங்கள்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads