பாயான் லெப்பாஸ்

பினாங்குத் தீவின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

பாயான் லெப்பாஸ்map
Remove ads

பாயான் லெப்பாஸ் (ஆங்கிலம்: Bayan Lepas; மலாய் Bayan Lepas; சீனம்: 峇六拜; ஜாவி: بيان لڤس) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், பினாங்குத் தீவின் தென்கிழக்கு முனையில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.[1]

விரைவான உண்மைகள் பாயான் லெப்பாஸ், நாடு ...

19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த நகரத்தில், பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Penang International Airport); மற்றும் இலவசத் தொழில்துறை மண்டலம் (Free Industrial Zone); ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இலவசத் தொழில்துறை மண்டலத்தைக் கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley of the East) என்று அழைக்கிறார்கள்.[2][3]

போஸ்ச் (Bosch), மோட்டரோலா (Motorola), டெல் (Dell), இண்டல் (Intel) மற்றும் அவ்லர்ட் பக்கார்ட் (Hewlett-Packard) போன்ற பல்வேறு பன்னாட்டு மின்னணு; பொறியியல் நிறுவனங்கள்; இந்தப் பாயான் லெப்பாஸ் நகரத்திற்குள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.

Remove ads

பொது

பிரித்தானிய மலாயாவில் கட்டப்பட்ட முதல் பொது விமான நிலையமான பினாங்கு அனைத்துலக விமான நிலையம் 1935-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. 1970-களில், பாயான் லெப்பாஸ் இலவசத் தொழில்துறை மண்டலம் (Bayan Lepas Free Industrial Zone) உருவாக்கப்பட்டது. அதுவே பாயான் லெப்பாஸ் நகரத்தின் துரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்துக் கொடுததது.[4]

பாயான் லெப்பாஸ் மையப் பகுதியைச் சுற்றிலும் பல நகர்ப்புறக் குடியிருப்புகள் உள்ளன. வடக்கே பாயான் பாரு (Bayan Baru) மற்றும் சுங்கை ஆரா (Sungai Ara) குடியிருப்பு நகரங்கள். தென்கிழக்கில் பத்து மாவுங் (Batu Maung) குடியிருப்பு நகரம். அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுதியான பகுதிகளில் பாயான் லெப்பாஸ் நகரமும் ஒன்றாகக் கருதப் படுகிறது.

Remove ads

வரலாறு

Thumb
பாயான் லெப்பாஸ் 'பழைய நகரம்'; பினாங்குத் தீவின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது.
Thumb
1970-களில் பாயான் லெப்பாஸ் இலவசத் தொழில்துறை மண்டலம் திறக்கப் பட்டதைத் தொடர்ந்து புதிய குடியிருப்புகள் உருவாகின.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாயான் லெப்பாஸ் பகுதியில் குடியேறிய ஒரு வசதிமிக்க சுமத்திரா குடும்பத்தின் பெயரால் பாயான் லெப்பாஸ் என பெயரிடப் பட்டதாக நம்பப் படுகிறது.[5][4] பாயான் லெப்பாஸ் என்றால் மலாய் மொழியில் தப்பித்த கிளி என்று பொருள்.

அந்தச் சுமத்திரா குடும்பத்தினர் கரைக்கு வந்ததும், அவர்களின் செல்லப் பறவையான கிளி தப்பியதால், அந்த இடத்திற்கு 'தப்பித்த கிளி' என்று பெயர் வைக்கப் பட்டதாகவும் அறியப் படுகிறது. மலாய் மொழியில் Bayan என்றால் கிளி; Lepas என்றால் விடுபடுதல் என்று பொருள்.

பினாங்கின் 'அரிசிக் கிண்ணம்'

1935-ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்க அதிகாரிகளால் பாயான் லெப்பாஸ் விமான நிலையம் திறக்கப்பட்டது. பிரித்தானிய மலாயாவில் கட்டப்பட்ட முதல் விமான நிலையம் இதுவாகும். இந்த விமான நிலையம் 1979-இல் விரிவாக்கப்பட்டு பினாங்கு அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டது.[6]

1970-ஆண்டுகள் வரை, பாயான் லெப்பாஸ் ஒரு கிராமப் புறமாகத்தான் இருந்தது. அங்கு நெல் விவசாயம் முக்கியப் பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. இதன் விளைவாக, இந்த நகரம் ஒரு காலத்தில் பினாங்கின் 'அரிசிக் கிண்ணம்' என்றும் புகழப்பட்டது.[4]

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள்

1972-ஆம் ஆண்டில், பினாங்கைப் பாதித்த பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையைப் போக்க, அப்போதைய பினாங்கின் முதலமைச்சர் லிம் சோங் யூ (Lim Chong Eu), பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலத்தை உருவாக்கினார்.[5][4][7]

பாயான் லெப்பாஸில் தொழிற்சாலைகள் நிறுவ விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னோடி வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் பாயான் லெப்பாஸ் இலவசத் தொழில்துறை மண்டலத்தின் (Bayan Lepas Free Industrial Zone) தோற்றமானது; பினாங்கின் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்தியது என்றும் சொல்லப்படுவது உண்டு. அதே நேரத்தில் அந்தத் தொழில்துறை மண்டலம் 'கிழக்கின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என பெயரும் பெற்றது.[2][3]

Thumb
பினாங்கு அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா பாலத்தின் பரந்த வான்வழிக் காட்சி
Remove ads

பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளிகள்

பினாங்கு தென்மேற்கு பினாங்குத் தீவு மாவட்டத்தின் (Southwest Penang Island District) பாயான் லெப்பாஸ் நகர்ப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 200 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[8]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads