புத்ரா பன்னாட்டு மைய எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், புத்ரா பன்னாட்டு வணிக மைய இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் அல்லது புத்ரா பன்னாட்டு வணிக மைய இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: PWTC LRT Station; மலாய்: Stesen LRT PWTC; சீனம்: 布特拉世界贸易中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; ஆகிய வழித்தடங்களுக்கான ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[3]
இந்த நிலையம் பி.டபிள்யூ.டி.சி நிலையம் (PWTC Station) என பரவலாக அறியப்படுகிறது. புத்ரா பன்னாட்டு வணிக மையம் (Putra World Trade Center) எனும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமே பி.டபிள்யூ.டி.சி (PWTC) ஆகும். புத்ரா பன்னாட்டு வணிக மையம் என்பது தற்போது கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் (World Trade Centre Kuala Lumpur) என அறியப்படுகிறது.[4]
கோலாலம்பூர் பன்னாட்டு வணிக மையம் என்பது மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மாநாடு மற்றும் கண்காட்சி மையமாகும்.[5]
Remove ads
பொது
இந்த நிலையம் கோலாலம்பூரின் தங்க முக்கோணப் பகுதியில் (Golden Triangle) அமைந்துள்ளது; மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் (Kuala Lumpur International Airport) (KLIA) இருந்து 45 நிமிடப் பயணத் தொலைவில் உள்ளது.
அத்துடன், இந்த நிலையத்திற்கு அருகில் ஒரு வணிகப் பேரங்காடி, உணவகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் 3 - 5 நட்சத்திரத் தங்கும் விடுதிகள் உள்ளன. அவை நடந்து செல்லும் தொலைவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையத்திலிருந்து ஏறக்குறைய 400 மீட்டர் நடைப்பயணத்தில்,
பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம்; மற்றும்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்; ஆகிய இரு வழித்தடங்கள் உள்ளன. அங்கு KA04 புத்ரா கொமுட்டர் நிலையம் உள்ளது.
Remove ads
சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம்
புத்ரா பன்னாட்டு வணிக மைய எல்ஆர்டி நிலையம் 1998-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) அமைப்பின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, கோலாலம்பூரில் உள்ள சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து செரி பெட்டாலிங் வரையில் 12 கி.மீ. நீட்டிப்பு செய்யப்பட்டது.
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
மற்றும் இந்த நிலையம், சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் முதல் செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் வரையிலான 3 கி.மீ. நீட்டிப்பையும் கொண்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், கோலாலம்பூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு சேவை செய்ய 11 நிலையங்களைக் கொண்ட 15 கி.மீ. வழித்தடம் உருவாக்கப்பட்டது.
மேலும் காண்க
காட்சியகம்
புத்ரா பன்னாட்டு வணிக மைய நிலையக் காட்சிப் படங்கள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

